தீ பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள், இராணுவ ஜீப் வண்டி ; மட்டக்களப்பில் பதற்றம்
29 Jul,2019
மட்டக்களப்பு மத்திய பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் இராணவ ஜீப் வண்டி ஒன்றும் தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ள சம்பவம் இன்று திங்கட்கிழமை (29) பகல் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
இன்று காலை குறித்த பஸ் நிலையத்தின் பின்பகுயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததற்கு அருகில் இராணு புனர்வாழ்வு பிரிவின் ஜீப்வண்டி ஒன்றை நிறுத்தி விட்டு இராணுவ புனர்வாழ்வு காரியாலயத்திற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் பகல் 1 மணியளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததையடுத்து அங்கிருந்த பெதுமக்கள் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்த போதும் மோட்டார் சைக்கிள் முற்றாக தீயில் எரிந்துள்ளதுடன் இராணுவ ஜீப்வண்டியும் சிறியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸ் குற்ற தடயவியல் பிரிவு மற்றும் இராணுவத்தினர். வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்