இலங்கையில் இன்று பதற்றம்: துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி; குவிக்கப்பட்டுள்ள அதிரடிப்படை மற்றும் பொலிஸார்!
28 Jul,2019
கொவுவலை – ஜம்புகஸ்முல்ல மாவத்தை பகுதியில் இன்று அதிகாலை நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் பயணித்த ஜீப் வாகனத்திற்கு இலக்கு வைத்து அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த வாகனத்தில் இருவர் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது காயமடைந்த இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் உடாமுல்ல பகுதியை சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொவுவலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் எனவும் தெரிவித்தள்ளனர்.