சாரதிக்கு 50 இலட்சம் ரூபாய் பணப்பரிசு!!
25 Jul,2019
சாய்ந்தமருது பகுதியில் வெடிபொருட்கள் காணப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய சாரதிக்கு 50 இலட்சம் ரூபாய் பணப்பாிசை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவருக்கான பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து இவர் வழங்கிய தகவலுக்கு அமைய சாய்ந்தமருது பகுதியில் இருந்து பாரியளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.