இலங்கையில் பிரான்ஸ் தம்பதிக்கு காத்திருந்த அரதிர்ச்சி!
                  
                     22 Jul,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	உடவளவை தேசிய வனத்தை பார்வையிட வந்த, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூவர் பயணித்த சபாரி வாகனத்தின் மீது, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் அர்கள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
	தமது 12 வயது பிள்ளையுடன், பிரான்ஸைச் சேர்ந்த தம்பதியினர், உடவளவ வனத்தைப் பார்வையிட்டதுடன் கல்அமுன வனத்தில் ஓய்வெடுத்த போது, மிருக வேட்டையில் ஈடுபட்ட மூவரை புகைப்படம் எடுத்துள்ளனர்.
	பின்னர், குறித்த ஜோடி தமது பிள்ளையுடன் வனத்திலிருந்து வாகனம் மூலம் வெளியேறும் போது, குறித்த வேட்டைக்காரர்கள் இவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளனர்.
	இதற்கு வாகனத்தின் சாரதி எதிர்ப்பை தெரிவித்த போது, வேட்டைக்காரர்கள் அவர்களிடம் இருந்த துப்பாக்கியால் வாகனத்தை சுட்டுள்ளனர். இதனால் வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
	இந்த சம்பவம் தொடர்பில், அம்பேகமுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
	ஏற்கனவே உயிர்த்தஞாயிஞ தாக்குதல்கள் காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவடைந்து விடுதிகள் வெறுமையாக காட்சியளிப்பதுடன் அரசின் வருமானமும் வீழ்ச்சியடைந்துள்ளது.
	இந்தநிலையில் தற்போது மெல்ல மேல்ல சுற்றுலாப்பயணிகள் மீளவும் வரத்தொடங்கும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் மேலும் சுற்றுலாத்துறையை பாதிப்பதாக அமையுமென தெரிவிக்கப்படுகிறது.