முல்லைத்தீவில் பரபரப்பு!! சிறுமியைக் கடத்தி வல்லுறவுக்குள்ளாக்கிய திருக்குமாருக்கு 39 வருட கடூழிய சிறை
21 Jul,2019
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் பதின்ம வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று மூன்று
தடவைகள் வன்புணர்ந்த குற்றவாளிக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தீர்ப்பளித்தார்.
“எதிரி சிறுமியைக் கடத்திச் சென்ற குற்றத்துக்கு 3 ஆண்டுகளும் வன்புணர்த்தமைக்கு 12
ஆண்டுகளும் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்தச் சிறைத் தண்டனையை குற்றவாளி ஒன்றின் பின் ஒன்றாக அனுபவிக்கவேண்டும். அத்துடன், சிறுமியை இரண்டாவது மற்றும் மூன்றாது தடவை வன்புணர்ந்த குற்றத்துக்கு எதிரிக்கு தலா 12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படுகிறது.
முதலவாது மற்றும் இரண்டாவது தண்டனைக் காலம் நிறைவடைந்த பின்னர் மூன்றாது மற்றும் நாளாவது குற்றத்துக்கான சிறைத் தண்டனையை குற்றவாளி ஏக காலத்தில் அனுபவிக்க முடியும்.
அதனால் எதிரி 27 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி தண்டனைத் தீர்ப்பளித்தார்.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முதலாம் திகதிக்கும் 15ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தாயாரின் பாதுகாப்பிலிருந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியைக் கடத்திச் சென்று வன் புணர்ந்த குற்றச்சாட்டில் இராசகுமார் திருக்குமார் என்பவர் புதுக்குடியிருப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்றன. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சந்தேகநபருக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வவுனியா மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகை எதிரிக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்ட போது அவர் சுற்றவாளி என மன்றுரைத்தார். அதனால்
வழக்கு வவுனியா மேல் நீதிமன்றில் நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் இடம்பெற்றது.
வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் வழக்கை நெறிப்படுத்தினார்.
எதிரி சார்பில் சட்டத்தரணி பிரசாத் காரியவசம் முன்னிலையானார்.
எதிரி தன்னைக் கடத்திச் சென்று வன்புணர்ந்தமை தொடர்பில் முதலாவது சாட்சியான பாதிக்கப்பட்ட சிறுமி சாட்சியமளித்தார். சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டமை தொடர்பில் மருத்துவ
பரிசோதனையில் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டதாக நிபுணத்துவ சாட்சியத்தில் சட்ட மருத்துவ அதிகாரி சாட்சியமளித்தார்.
எதிரி கூண்டுச் சாட்சியமளித்தார். அவர் தான் இந்தக் குற்றங்களைச் செய்யவில்லை என்று மட்டுமே கூண்டுச் சாட்சியம் வழங்கினார்.
எனினும் அரச தரப்புச் சாட்சியங்களை சந்தேகத்துக்கிடமானதாக்கும் வகையில் எதிரி தரப்பு வாதங்களை முன்வைக்கவில்லை.
சாட்சியங்கள், எதிரி தரப்பு விசாரணை மற்றும் சமர்ப்பணங்கள் நிறைவடைந்த நிலையில் வழக்கைத் தீர்ப்புக்காக வவுனியா மேல் நீதிமன்றம் இன்றைய தினத்தை நிர்ணயித்திருந்தது.
“எதிரி மீதான 4 குற்றச்சாட்டுக்களும் வழக்குத் தொடுனரால் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதனால் எதிரியை 4 குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளியாக மன்று தீர்மானிக்கின்றது” என்று மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தீர்ப்பளித்தார்.
“சிறுமியைக் கடத்திச் சென்ற குற்றத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அத்துடன், 5 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்படுகிறது. தண்டப் பணம் செலுத்தத் தவறின் 3 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
சிறுமியை முதலாவது தடவையாக வன்புணர்ந்த குற்றத்துக்கு எதிரிக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.
அத்துடன், பாதிக்கப்பட்டச் சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படவேண்டும். அதனை வழங்காவிடின் 12 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
மேலும் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தத் தவறினால் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
சிறுமியை இரண்டாவது தடவை வன்புணர்ந்த குற்றத்துக்கு எதிரிக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.
அத்துடன், பாதிக்கப்பட்டச் சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படவேண்டும். அதனை வழங்காவிடின் 12 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க
வேண்டும். மேலும் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தத் தவறினால் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
சிறுமியை மூன்றாவது தடவை வன்புணர்ந்த குற்றத்துக்கு எதிரிக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அத்துடன், பாதிக்கப்பட்டச் சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபா
இழப்பீடு வழங்கப்படவேண்டும். அதனை வழங்காவிடின் 12 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். மேலும் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும்.
அதனைச் செலுத்தத் தவறினால் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
எதிரி முதவாவது மற்றும் இரண்டாவது குற்றங்களுக்கான முறையே 3 மற்றும் 12 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும்.
மூன்றாவது மற்றும் நான்காவது குற்றங்களுக்கான தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க முடியும். அதனால் எதிரி 27 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்”
என்று மேல் நீதிமன்ற நீதிபதி தண்டனைத் தீர்ப்பளித்தார்.