மதுபோதையில் வாகனம் செலுத்திய 177 சாரதிகள் கைது
                  
                     20 Jul,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	
	கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 177 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விஷேட நடவடிக்கை கடந்த 05ம் திகதி ஆரம்பமாகியது.
	அதன்படி நேற்று காலை 06.00 மணி முதல் இன்று காலை ஆறு மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் 177 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
	கடந்த 05ம் திகதி மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து 3879 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.