மன்னிப்புக் கோரவில்லையானால் தண்டனை வழங்கவும்: மஹிந்த
16 Jul,2019
மகா சங்கத்தினரை அகௌரவப்படுத்தும் வகையில் அறிவிப்புச் செய்தவர்கள் மன்னிப்புக் கோரவில்லையாயின் அவருக்கு தண்டனை வழங்குவது நாட்டின் தலைவர்களது பொறுப்பாகும் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அண்மைய காலத்தில் அதிகமான அச்சுறுத்தல்களுக்கு மகா சங்கத்தினர் உள்ளாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.காலி, போத்தல பிரதேசத்திலுள்ள விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்