தீயில் எரிந்து படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி
06 Jul,2019
தீயில் எரிந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுவந்த பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
அராலி கிழக்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 32 வயதுடைய குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கடந்த 30ஆம் திகதி இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்த குறித்த பெண்ணின் கணவர் உணவுக்காக மனைவியை அழைத்ததோடு, அவரைக் கடுமையாகத் தாக்கினார் என்றும், தலையில் தாக்கப்பட்ட மனைவி மயங்கி விழ, கணவர் மண்ணெண்னை ஊற்றித் தீ மூட்டினார் என தெரியவந்துள்ளது.
அதை அவதானித்த 14 வயது மகன் ஓடிச் சென்று தீணை அணைக்க முயன்றார் என்றும், தந்தை கையைப் பிடித்துத் தடுத்தார் என்றும், தந்தையையின் கையைக் கடித்துவிட்டுத் தப்பிச் சென்ற மகன், நீர் ஊற்றித் தீயை அணைத்தார் என பொலிஸ் தெரிவித்துள்ளனர்.
அயலில் உள்ளவர்களின் உதவியோடு பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.