சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க இலங்கை - தாய்லாந்துக்கிடையில் உடன்படிக்கை
05 Jul,2019
யணிகளின் வருகையினை அதிகரிப்பது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று இலங்கை மற்றும் தாய்லாந்து அகிய நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தாய்லாந்து சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையினை அதிகரித்துக் கொள்வதே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு தாய்லாந்தின் பெளத்த ஸ்தலங்களுக்கும் தாய்லாந்தின் சுற்றுலா பயணிகளுக்கு இலங்கையின் பெளத்த ஸ்தலங்களுக்கும் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பது போன்றன இந்த உடன்படிக்கையில் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது