பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் நிகழ்வு
05 Jul,2019
யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் நிகழ்வு இன்று (05) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இந்திய அரசின் உதவியுடன் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு சிவில் விமான நிலையமாக மாற்றி அமைப்பதற்கான அபிவிருத்தித் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பிரதம விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து கொண்டு, புனரமைப்பு ஆரம்பம் தொடர்பில் அமைக்கப்பட்ட கல்லை திரை நீக்கம் செய்து வைத்தார்.
இந் நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழிலுள்ள இந்திய துணை தூதுவர், அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.