இலங்கை மீதான பயண தடையை நீக்கியது ஜப்பான்
02 Jul,2019
இலங்கை மீது ஜப்பான் விதித்திருந்த சுற்றுலா பயண தடையை நீக்கியுள்ளது.உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் ஜப்பான் தமது நாட்டு பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதை எச்சரிக்கும் வகையில் இந்த பயண ஆலோசனை தடை விதிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பிலான விடயங்களை கவனத்திற் கொண்டு இந்த தடையில் தளர்வை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் அரசாங்கம் விதித்திருந்த சுற்றுலா பயண ஆலோசனை தடை –Level I ஐ இல் தளர்வு ஏற்படுத்தி இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும் ஜப்பான் நாட்டவர்கள் போதுமான விழிப்புணர்வுடன் இலங்கையில் இருக்கும் தருணத்தில் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் 49,450 ஜப்பான் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.