இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பெண்ணொருவருக்கு கிடைக்கவுள்ள தண்டனை
30 Jun,2019
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய அடுத்து சில நாட்களில் நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு பேர் கொண்ட பட்டியலில் முதலாவதாக இருப்பது பெண் என தெரிய வருகிறது. மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த ஷியாமலி பெரேரா என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
குற்றவாளியான குறித்த பெண்ணுக்கு 2011ஆம் மார்ச் மாதம் முதலாம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்ற வழக்குகளின் 54வது சரத்தின் படி இலங்கையில் பெண் ஒருவருக்கு இதுவரையில் மரண தண்டனை விதிக்கப்பட்டதில்லை. சிறைச்சாலை வரலாற்றில் பெண்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட மிகப்பெரிய தண்டனை ஆயுள் தண்டனையாகும்.