அவசரக்கால சட்டம் நீடிப்பது தொடர்பான வாக்கெடுப்பு
28 Jun,2019
அவசரக்கால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 10.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது அவரசகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பாக விவாதம் இடம்பெறும், அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களைத் தடுத்துவைத்து விசாரிக்க, இராணுவத்தினரைத் தூதரகங்களில் பாதுகாப்பில் ஈடுபடுத்த மற்றும் ஆடைகள் தொடர்பான கோட்பாடுகளைப் பேணுவதற்கு அவசரகாலச் சட்டம் தேவைப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாக அவசாரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக நேற்று காலை நடந்த ஊடகப் பிரதானிகளின் கலந்துரையாடலில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.