அதிபர் தேர்தலில் போட்டியிட நானும் தயார்“ – ராஜித சேனாரத்ன
24 Jun,2019
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“பிரபலமான பௌத்த பிக்கு ஒருவர், என்னை அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டார்.
கட்சி முடிவு செய்து எனக்கு வேட்புமனுவை வழங்கினால், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்.
எனக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டால், அதிபர் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்று, எனக்குத் தெரியும்.
இரண்டு தரப்புகளில் இருந்தும் என்னால் வாக்குகளைப் பெற முடியும்.
கடற்றொழில் அமைச்சையும், சுகாதார அமைச்சையும் புதுப்பித்ததைப் போலவே, நாட்டையும் புதுப்பிப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.