பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமனம்
10 Jun,2019
புதிய பதில் அமைச்சர்கள் மூவர் இன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் லகீ ஜயவர்தன, நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கைத்தொழில் மற்றும் வாணிப பிரதி அமைச்சர் புத்திக பத்திரன, கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனோமா கமகே, நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை மேம்பாடு மற்றும் பெட்ரோலிய வளங்கள் அபிவிருத்தி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.