இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ஸவுடன் சந்திப்பு
                  
                     08 Jun,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	
	அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்த சகலரும் இன்று (08) எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், ரிசாட் பதியுத்தீன், ஏ.எச்.எம். பௌசி உட்பட முஸ்லிம் எம்.பிக்கள் ஏழுபேர் கலந்துகொண்டுள்ளனர். எதிர்க் கட்சி சார்பில் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
	முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒரே முறையில் அரசாங்கத்தின் பதவிகளிலிருந்து விலகியதை தான் ஒரு போதும் அனுமதிப்பதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ கருத்துத் தெரிவித்துள்ளார்.
	இன ரீதியாக ஒன்றாக இருந்து அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.
	நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாகவும், இதன்காரணமாகவே தாம் அரசாங்கத்தின் பதவிகளிலிருந்து வெளியேறியதாகவும் முஸ்லிம் அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
	அடிப்படைவாதத்துக்கு தாம் எதிரானவர்கள் எனவும், சகல மக்களும் ஒன்றாக வாழும் சூழலை உருவாக்குவது தமது எதிர்பார்ப்பாகும் எனவும் அவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.