உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரிக்க புதிய நீதியரசர்கள் குழு
06 Jun,2019
கடந்த ஏப்பரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் தொடர்பான அனைத்து மனுக்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்ள 7 நீதியரசர்கள் அடங்கிய குழு ஒன்றை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.
அத்தோடு பொலிஸ் மா அதிபர், மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தொடர்பான விசாரணைகளும் இதன் போது மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில் குறித்த விசாரணைகள் அனைத்தும் எதிர்வரும் அடுத்த மாதம் 12 ஆம் திகதி பிரதம நீதியரசர் முன்னிலையில் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.