அடுத்த ஜனாதிபதி மைத்திரி – பிரதமராக மஹிந்த: சுதந்திரக்கட்சிக்குள் புதிய வியூகம்
03 Jun,2019
ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரை தொடர்பாக ஸ்ரீ.ல.சு.க பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தனக்கு தெரிவித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இரு அரசியல் கட்சிகளுக்கும் இடையில் பிளவுபடும் நிலைகள் காணப்படுவதனால் தயாசிறி ஜயசேகர பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூறினார்.
மேலும் மஹிந்த ராஜபக்ஷவை அடுத்த பிரதமராகவும் மைத்திரிபால சிறிசேனவை அடுத்த ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் ஜெயசேகர தெரிவித்ததாக கூறிய ஜி.எல். பீரிஸ் இந்த விடயம் தொடர்பாக விவாதிக்க தற்போது நேரம் இல்லை என கூறியதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஸ்ரீ.ல.பொ.பெ ஆகிய காட்சிகள் அடுத்த தேர்தல்களில் ஒரு கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிட்டுள்ளது.