அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜிநாமா கடிதங்களை கையளித்தனர்
03 Jun,2019
ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.
விரைவில் புதிய ஆளுநர்களை ஜனாதிபதி நியமிப்பார் என தெரியவந்துள்ளது.
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது இராஜிநாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் குறித்த இரு ஆளுநர்களின் பதவி விலகல் இராஜிநாமா கடிதங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது