முஸ்லிம் ஊர்­காவல் படை­யி­னரின் ஆயு­தங்கள் களை­யப்­ப­ட­வில்லை”

03 Jun,2019
 

 


 

“இரா­ணு­வத்­ த­ள­ப­திக்கு வாக்­க­ளித்த தமிழ் மக்கள் பாது­காப்புச் செய­லா­ள­ருக்கு வாக்­க­ளிப்­பதில் தவ­றில்லை: கிழக்கு மாகாண தமி­ழர்­களின் இருப்­பினை பாது­காக்க வேண்­டி­யது தமிழ்த் தலை­வர்­களின் கடமை”
விடு­த­லைப்­பு­லி­களின் ஆயு­தங்கள் முஸ்­லிம்­க­ளுக்கு விற்­கப்­ப­ட­வில்லை. இந்­திய படை­க­ளுக்கு எதி­ராக அமைக்­கப்­பட்ட தமிழ்த் தேசிய இரா­ணு­வத்தின் ஆயு­தங்­களே பெரு­ம­ளவில் முஸ்லிம் தரப்­புக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன.
அத்­துடன் அர­சாங்­கத்தின் அங்­கீ­கா­ரத்­துடன் கிழக்கில் உரு­வாக்­கப்­பட்ட முஸ்லிம் ஊர்­காவல் படை­யி­ன­ருக்கு வழங்­கப்­பட்ட ஆயு­தங்கள் முழு­மை­யாக களை­யப்­ப­ட­வில்­லை­யென தமிழர் ஐக்­கிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் பிரதி அமைச்­ச­ரு­மான விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா அம்மான்) தெரி­வித்தார்.
வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அச்­செவ்வி நிறை­வுப்­ப­குதி வரு­மாறு,
கேள்வி:- விடு­த­லைப்­பு­லி­களின் தலை­மைக்கும் முஸ்லிம் தலை­மை­க­ளுக்­கு­மான சந்­திப்­பின்­போது தனி­ய­லகு பற்றி பேசப்­பட்­டதா?
பதில்:- முஸ்லிம் தலை­மைகள் பேச்­சு ­வார்த்­தை­க­ளின்­போது தனி­ய­லகு கோரிக்­கையை முன்­வைத்­தி­ருந்­தார்கள். குறிப்­பாக, நோர்வே தலை­மை­யி­லான பேச்­சுக்­க­ளின்­போது ஹக்கீம் தலை­மை­யி­லான பிர­தி­நி­தி­களும் கலந்து கொண்­டார்கள்.
ஆனால், நாம் அதனை ஏற்­றுக்­கொண்­டி­ருக்­க­வில்லை. தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் வட­கி­ழக்கு இணைந்த தாய­கத்­திற்­கா­கவே ஆயு­தப்­போ­ராட்­டத்­தினை முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள்.
வட­கி­ழக்கு என்­பது தமி­ழர்­களின் தாயகம் என்­பதை யாரும் மறுக்க முடி­யாது. முஸ்­லிம்கள் வர்த்­தக நோக்­கத்­திற்­காக கிழக்கில் வந்து கள­மி­றங்­கி­ய­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றார்கள்.
முதன்­மு­த­லாக முஸ்லிம் ஆண்­களே கல்­மு­னைக்­கு­டியில் வந்­தி­றங்­கி­னார்கள். இவ்­வாறு தான் அவர்­களின் வர­லாறு இருக்­கின்­றது.
அப்­ப­டி­யி­ருக்­கையில், வட­கி­ழக்கு தமி­ழர்­களின் பாரம்­ப­ரிய தாயகம். தமி­ழர்­க­ளுக்கு தாயகம் கிடைக்­கின்­ற­போது முஸ்­லிம்­க­ளுடன் பேச்­சுக்­களை நடத்தி தீர்­வினை வழங்­குவோம் என்ற முடி­வுக்கே வந்­தி­ருந்தோம்.
ஏனென்றால் தனி­நாடு கோரி நாம் போரா­டிக்­கொண்­டி­ருக்­கையில், முஸ்­லிம்­களும் தனி­ய­லகைக் கோரு­கையில் அவை கிடைப்­ப­தென்­பது சாத்­தி­ய­மற்ற விட­ய­மாகும்.
அதற்­காக முஸ்­லிம்­களை எமது நிரு­வா­கத்­திற்குள் அடக்­கு­வ­தற்கு நாம் விரும்­ப­வில்லை. ஆனால், முஸ்­லிம்கள் அதனை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. வடக்கும் கிழக்கும் இணை­வதை  எதிர்ப்­பதில் முத­லா­வது முஸ்லிம் பிர­தி ­நிதி ஹிஸ்­புல்லாஹ் ஆவார். வட­கி­ழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்றார். ஆனால், அவர் என்ன நோக்­கத்­திற்­காக கூறு­கின்றார் என்­பது தெரி­யா­துள்­ளது.
கேள்வி:- வடக்கு, கிழக்கு இணைப்பில் உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்­ன­வாக இருக்­கின்­றது?
பதில்:- வடக்கு கிழக்கு எமது பூர்­வீக தாயகம். அதனை சட்­ட­ரீ­தி­யாக பிரித்து வைத்­துள்­ளார்கள் நாம் எமது தாய­கத்­தினை தனி நாடாக அங்­கீ­க­ரிக்­கு­மாறு கோரி போரா­டி­யி­ருந்தோம்.
இப்­போது எமது தாய­கத்தின் உரி­மை­களை வழங்­கு­மாறு கோரு­கின்றோம். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அதனை ஏற்­றுக்­கொண்­டி­ருந்தார். அத்­துடன் 13இற்கு அப்­பாற்­சென்று அதி­கா­ரங்­களை வழங்­குவேன் என்றும் கூறி­யி­ருந்தார்.
அதனை நாம் சரி­யாக பயன்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை. இந்த விடயம் சம்­பந்­த­மாக தனிப்­பட்ட முறையில் நான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் கலந்­து­ரை­யா­டிய போது அவர்கள் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு விரும்­ப­வில்லை.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் யாருடன் அது­கு­றித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தீர்கள்?
பதில்:- மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஒப்­பு­த­லைப் ­பெற்­றுக்­கொண்டு கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் உள்­ளிட்­ட­வர்­க­ளுடன் நான் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தேன்.
ஆனால், அதனை ஏற்­றுக்­கொண்டு பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு கூட்­ட­மைப்பு விரும்­ப­வில்லை. மஹிந்த ராஜ­ப­க் ஷவின் கூற்றின் மீது நம்­பிக்கை இல்­லை­யென்றே கூறி­னார்கள். பூகோள ரீதி­யான அர­சி­யலை அவ­தா­னிக்­கின்­ற ­போது, மீண்­டு­மொரு ஆயு­தப்
­போ­ராட்டம் சாத்­தி­ய­மில்லை. எமக்­குள்ள மக்கள் ஆணை பலத்­தினை வைத்­துக் ­கொண்டு தான் நகர்­வு­களை செய்ய வேண்டும். அத­னை­வி­டுத்து சர்­வ­தேசம் வரும், தீர்வு வழங்கும் என்று கூறிக்­கொண்­டி­ருப்­பது வேடிக்­கை­யான விட­ய­மாகும்.
கேள்வி:- கிழக்கில் தமி­ழர்கள் இருப்பு கேள்­விக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­வதை எப்­படி பார்க்­கின்­றீர்கள்?
பதில்:- நூற்­றுக்கு நூறு­வீதம் உண்­மை­யான விடயம். இதற்கு தமிழ்த் தலை­மை­களின் தவ­று­களே பிர­தா­ன­மாக காணப்­ப­டு­கின்­றன.
கிழக்கில் தமி­ழர்கள் ஒற்­று­மை­யாக இருந்தால் தமிழ் முத­ல­மைச்சர் ஒரு­வரை உரு­வாக்க முடியும். தமிழர் ஒரு­வரை முத­ல­மைச்­ச­ராக்­கு­வ­தற்­கான வாக்­குப்­ப­லத்­தினை தமிழ் மக்கள் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அந்த வாக்­குப்­ப­லத்­தினை யாரும் பயன்­ப­டுத்­து­வ­தாக இல்லை.
போர் நிறை­வ­டைந்து கிழக்கில் தேர்தல் நடத்­து­வ­தற்­கான தயார்ப்­ப­டுத்­தல்கள் நடத்­தப்­பட்ட போது மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினை நேரில் சந்­தித்­தி­ருந்தேன்.
போர் முடிவின் பின்னர் தீர்­வொன்று ஏற்­பட வேண்­டு­மாயின் கிழக்கில் தமிழர் ஒரு­வரை முத­ல­மைச்­ச­ராக நிய­மி­யுங்கள் என்று கோரி­யி­ருந்தேன்.
நான்கு ஆச­னங்­களைப் பெற்ற சந்­தி­ர­கா­சனை(பிள்­ளை­யானை)  எத்­த­னையோ எதிர்ப்­புக்­களை தாண்டி மஹிந்த ராஜ­பக் ஷ முத­ல­மைச்­ச­ராக நிய­மித்­தி­ருந்தார்.
பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் வெறும் ஏழு ஆச­னங்­களை எடுத்த நான் கிழக்கு மாகா­ணத்­தினை ஆட்­டிப்­ப­டைக்­கின்றேன் என்று மு.கா தலைவர் ஹக்கீம் இழி­வாக உரைக்கும் அள­விற்கு கூட்­ட­மைப்பின் செயற்­பா­டுகள் அமைந்­தி­ருந்­தன.
கூட்­ட­மைப்­பிற்கும் எனக்கும் எவ்­வி­த­மான தனிப்­பட்ட முரண்­பா­டு­களும் இல்லை. ஆனால், கிழக்கு மாகாண தமி­ழர்­களின் இருப்­பினை பாது­காக்க வேண்­டி­யது தமிழ்த் தலை­வர்­களின் கட­மை­யா­கின்­றது. ஆகவே அதனை ஆணை­பெற்ற கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் செயற்­ப­டுத்­தா­ம­லி­ருப்­பதே அவர்கள் மீதான எனது குற்­றச்­சாட்­டுக்கு கார­ண­மா­கின்­றது.
கேள்வி:- விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் போரா­ளிகள் ஆயு­தங்­களை முஸ்­லிம்­க­ளுக்கு விற்­பனை செய்­து­விட்டு நாட்­டை­விட்டு வெளி­யே­றி­ய­தா­கவும் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­ப­டு­கின்­றதே?
பதில்:- விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் போரா­ளி­களை கொச்­சைப்­ப­டுத்­து­வ­தற்கு நான் விரும்­ப­வில்லை. அவர்கள் ஆயு­தங்­களை முஸ்­லிம்­க­ளுக்கு விற்­பனை செய்து விட்டு வெளி­யே­றி­னார்கள் என்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. முஸ்­லிம்­க­ளுக்கு ஆயு­தங்­களை விற்­பனை செய்யும் அள­விற்கு உணர்­வற்ற நிலையில் விடு­த­லைப்­
பு­லிகள் போரா­ளிகள் இருக்­க­வில்லை.
கேள்வி:- போரின் பின்­ன­ரான சூழலில் துணைக்­கு­ழுக்­களின் ஆயு­தங்­களை முழு­மை­யாக களைந்து ஜன­நா­ய­கத்­தினை நிலை­நாட்­டி­ய­தாக முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­ாபய ராஜ­பக் ஷ கூறு­கிறார். அப்­ப­டி­யி­ருக்­கையில், முஸ்­லிம்­களை பாது­காப்­ப­தற்­காக வழங்­கப்­பட்ட ஆயு­தங்கள் முற்­றாக களை­யப்­பட்­டி­ருக்­க­லா­மல்­லவா?
பதில்:- முஸ்­லிம்கள் ஊர்­கா­வல்
­ப­டையில் இருந்த காலத்தில் ஆயு­தங்கள் பெரு­ம­ளவில் வழங்­கப்­பட்­டன. அவ்­வாறு வழங்­கப்­பட்ட ஆயு­தங்கள் முற்­றாக களை­யப்­ப­ட­வில்லை. அந்த ஆயு­தங்கள் அவர்­க­ளி­டத்தில் இருக்­கின்­றன என்­பது உண்­மை­யான விட­ய­மாகும். இந்­தியப் படைகள் இலங்­கைக்கு வந்த காலத்தில் தமிழ்த் தேசிய இரா­ணுவம் (ரி.என்.ஏ)உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது.
தமிழ்த் தேசிய இரா­ணு­வத்­தினை விடு­தலைப் புலிகள் அழித்த தரு­ணத்தில், அவர்­களின் பெரு­ம­ள­வான ஆயு­தங்கள் முஸ்லிம் பகு­தி­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டன. இவ்­வாறு தான் முஸ்­லிம்­க­ளுக்கு ஆயு­தங்கள் கிடைப்­ப­தற்கு வழிகள் ஏற்­பட்­டன.
கேள்வி:- கிழக்கு ஆளுநர் மீது நீங்கள் உள்­ளிட்ட பல­த­ரப்­பி­னரும் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்ற போதும் அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை  முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சாங்கம் ஏன் தயங்­கு­கின்­றது எனக் கரு­து­கின்­றீர்கள்?
பதில்:- ஆளு­ந­ராக இருக்கும் ஹிஸ்­புல்லாஹ் மீது எனக்கு தனிப்­பட்ட முரண்­பா­டுகள் எவையும் இல்லை. ஆனால், ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­ட­மைக்கு பலத்த எதிர்ப்­புக்கள் உள்­ளன. தாக்­குதல் சம்­ப­வங்­களின் பின்னர் அவர் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. குறிப்­பாக பயங்­க­ர­வாதி சஹ்­ரா­னுடன் கைலாகு கொடுத்த புகைப்­படம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
அவ்­வா­றான நிலை­மை­களில், ஜனா­தி­ப­தியோ, அர­சாங்­கத்­த­ரப்­பி­னரோ அவரை அழைத்து ஒரு­வார்த்தை கூட இவ்­வி­டயம் குறித்து வின­வாத நிலை­மையே இருக்­கின்­றது.
மாறாக, கிழக்கு மாகா­ணத்­திற்கு ஜனா­தி­பதி ஆளு­ந­ருடன் வரு­கிறார். சாய்ந்­த­ம­ரு­துவில் தற்­கொ­லை­தா­ரிகள் உயி­ரி­ழந்த இடத்­தினைச் சென்று பார்­வை­யி­டு­கிறார். ஆனாலும் குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு இலக்­கான தேவா­ல­யத்­தி­னையோ காய­ம­டைந்­த­வர்­க­ளையோ சென்று பார்க்­க­வில்லை.
ஜனா­தி­ப­திக்கும், கிழக்கு ஆளு­ந­ருக்கும் இடையில் இருக்கும் உற­வுகள் என்ன என்­பது குறித்து தெரி­யா­துள்­ளது. ஆனால், இத்­த­கைய செயற்­பா­டுகள் தமிழ் மக்கள் மத்­தியில் விரக்­தி­யான நிலை­மையை உரு­வாக்­கி­யுள்­ளது.
மறு­பக்­கத்தில் ஹிஸ்­புல்லாஹ் கிழக்கு ஆளுநர் பத­வியில் நீடிப்­ப­தற்கு அனைத்து தமி­ழர்­களும் எதிர்ப்­புக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர். இப்­ப­டி­யான நிலையில் தான் பத­வி­யி­லி­ருந்து வில­கப்­போ­வ­தில்லை என்ற நிலைப்­பாட்டில் கிழக்கு ஆளுநர் இருப்­ப­தா­னது இனங்­க­ளுக்­கி­டை­யி­லான விரி­சலை மேலும் அதி­க­ரிப்­ப­தா­கவே அமையும்.
கிழக்கு மாகா­ணத்தில் தமி­ழர்­களின் இருப்பு எவ்­வாறு பறி­போ­கின்­றது என்­பதை நான் நன்கு அறிவேன்.
நான் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான நிலைப்­பாட்­டினை கொண்­டி­ருக்­க­வில்லை. ஆனால், முஸ்­லிம்­களின் பெயரால் முன்­னெ­டுக்­கப்­படும் ஏகா­தி­பத்­தி­யத்­தினை முழு­மை­யாக எதிர்க்­கின்றேன். தொடர்ச்­சி­யாக அதற்கு எதி­ராக குர­லெ­ழுப்­பியே வரு­கின்றேன். விடு­தலைப் போராட்­டத்தில் பங்­கெ­டுத்­த­வ­னாக நான் இருக்­கின்றேன்.
அக்­கா­லத்தில் தமி­ழர்கள் அனை­வ­ரையும் விடு­தலைப் புலி­க­ளா­கவே சித்­த­ரித்­தார்கள். அந்த அனு­ப­வத்­தினைக் கொண்­டி­ருக்கும் நாம் முஸ்­லிம்கள் அனை­வ­ரையும் பயங்­க­ர­வா­தி­க­ளாக  கொள்ள முடி­யாது என்­ப­திலும் தெளி­வாக இருக்­கின்றோம்.
கேள்வி:- சஹ்ரான் சம்­பந்­த­மான தக­வல்­களை நீங்கள் அறிந்து வைத்­தி­ருந்­தீர்­களா?
பதில்:- காத்­தான்­கு­டியில் ஐ.எஸ் தீவி­ர­வாத அமைப்பின் ஊடு­ருவல் காணப்­ப­டு­கின்­றது. நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் இருக்­கின்­றார்கள் என்ற விட­யங்கள் ஊட­கங்­களில் பிர­சு­ர­மாகும் அள­விற்கு வெளிப்­ப­டை­யாக இருந்­தன. காத்­தான்­கு­டியில் 63பள்­ளி­வா­சல்கள் இருக்­கின்­றன. இவற்றில் எட்­டுப்­பள்­ளி­வா­சல்கள் வித்­தி­யா­ச­மான போக்­கினைக் கொண்­டி­ருக்­கின்­றன என்ற தக­வல்­களும் வெளி­யா­கி­யி­ருந்­தன.
சஹ்ரான், முதலில் ஓலைக்­கு­டி­சை­யி­லேயே பள்­ளி­வா­சலை அமைத்­தி­ருந்தார். தற்­போது அது மாளிகை போன்று உள்­ளது. இதற்­கான நிதி எங்­கி­ருந்து வந்­தது, யார் அனு­ம­தியை வழங்­கி­யது? என்­பதை அர­சாங்கம் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த வேண்டும்.
இத்­த­கைய ஒரு­வ­ருடன் தேர்­த­லுக்­காக கைலா­கு­கொ­டுத்­த­தாக ஹிஸ்­புல்லாஹ் கூறு­கின்றார். இப்­ராஹிம் ஹாஜி­யுடன் அமைச்சர் ரிஷாத் வர்த்­தக தொடர்­பு­களை கொண்­டி­ருப்­ப­தா­கவும் ஆதா­ரங்கள் உள்­ளன. ஆகவே, இவர்கள் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­டார்­களா இல்­லையா என்­ப­தற்கு அப்பால் இவர்­களை பத­வி­க­ளி­லி­ருந்து இடை­நி­றுத்தி விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த வேண்டும்.
ஒப்­ப­டைத்த வாக­னத்தை வைத்­தி­ருந்­த­மைக்­காக என்னை கைது செய்­தார்கள். புல­னாய்­வுப்­பி­ரிவால் அரி­ய­நேத்­திரன், சிறி­தரன் உள்­ளிட்ட தமிழ்த் தலை­வர்கள் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­ப­டு­கின்­றார்கள். தலை­வரின் படத்தை வைத்­தி­ருந்­த­மைக்­காக பல்­கலை மாண­வர்கள் கைது செய்­யப்­ப­டு­கின்­றார்கள்.
இவ்­வாறு தமிழர் தரப்­புக்கு ஒரு நீதி காணப்­ப­டு­கையில், இத்­தனை குற்­றச்­சாட்­டுக்கள் காணப்­படும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களை ஆகக்­கு­றைந்­தது விசா­ர­ணைக்கு கூட உட்­ப­டுத்­தா­தி­ருப்­பது ஏன்? இந்த நாட்டில் தமி­ழர்­க­ளுக்கு ஒரு நீதியும், முஸ்­லிம்­க­ளுக்கு இன்­னொரு நீதியும் காணப்­ப­டு­கின்­றதா?
கேள்வி:- உங்­க­ளு­டைய ஆட்­சிக்­கா­லத்தில் தான் சர்ச்­சைக்­கு­ரிய பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­கான அனு­மதி வழங்­கப்­பட்டு அடிக்கல் நாட்­டப்­பட்­டுள்­ளது. அக்­கா­லத்தில் இது­தொ­டர்பில் ஏன் கவனம் செலுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை?
பதில்:- ஆரம்­பத்தில் இந்த பல்­க­லைக்­க­ழகம் கிங் அப்­துல்லா கெம்பஸ் என்­று தான் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வி­ருந்­தது. இதனை நான் எதிர்த்தேன். மஹிந்த ராஜ­ப­க் ஷ­வி­டத்தில் இதனை அனு­ம­திக்கக் கூடாது என்றும் கூறினேன்.
எனக்கு ஆத­ர­வாக மறைந்த அஸ்வர் எம்.பி.யும் கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்தார். அத­னைத்­தொ­டர்ந்தே குறித்த பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டது. எனினும் நான் தொடர்ந்தும் எதிர்த்து வந்தேன்.
இருப்­பினும், வாகரைப் பிர­தேச சபை­யூ­டாக பாரி­ய­ளவில் காணிகள் வழங்­கப்­பட்­டன. தொழிற்­ப­யிற்சி அமைச்சும் இந்த விட­யத்தில் தவ­று­களை இழைத்து விட்­டது.
இருப்­பினும், அப்­போது அமைச்­ச­ராக இருந்த டளஸ் மக்­க­ளுக்கு நன்மை அளிக்கும் என்ற அடிப்­ப­டையில் வழங்­கப்­பட்­ட­தா­கவே கூறு­கின்றார்.
இவற்றை முழு­மை­யாக விசா­ரணை செய்ய வேண்டும். குறித்த பல்­க­லைக்­க­ழ­கத்தின் கட்­டட அமைப்பு அரே­பிய கட்­ட­டக்­க­லையை ஒத்­த­தா­கவே உள்­ளது. அதுவே தவ­றா­ன­தாகும். ஆகவே இதனை முழு­மை­யாக அர­சு­ட­மை­யாக்கி கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்­துடன் இணைக்க வேண்டும்.
கேள்வி:- கிழக்கில் இனங்­க­ளுக்­கி­டையில் சுமு­க­மான நிலை­மை­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு என்ன செய்ய வேண்டும்?
 பதில்:- தாக்­குதல் சம்­ப­வங்­க­ளைத்­தொ­டர்ந்து கிழக்கில் பதற்­ற­மான நிலை­மை­யொன்று இருந்­தது. இருப்­பினும் தமிழ், முஸ்லிம் தரப்­புக்­க­ளுடன் நான் நேர­டி­யா­கவே கலந்­து­ரை­யாடி அமை­தி­யான நிலை­மை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளேன்.
தாக்­குதல் நடை­பெற்ற தேவா­ல­யங்கள் ஒரு­மா­தத்­திற்­குள்­ளேயே புன­ர­மைப்புச் செய்­யப்­ப­டு­கின்­றன. கிரான் குளத்தில், ஆரை­யம்­பதி, ஏறாவூர் உள்­ளிட்ட பகு­தி­களில் தமி­ழர்கள் கொல்­லப்­பட்­டார்கள். இதற்­காக நாம் நினை­வுத்­தூ­பி­யொன்றை நிறுவி நினைவுக்கூரலை முன்­னெ­டுக்­கலாம்.
அத்­த­கைய செயற்­பா­டுகள் இனங்­க­ளுக்­கி­டை­யில் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்தும் என்று நாம் கரு­து­கின்றோம். ஆனால், காத்­தான்­கு­டியில் இடம்­பெற்ற சம்­ப­வங்­களை நினை­வுப­டுத்தும் வகையில் அந்­தப்­பள்­ளி­வா­சலில் தற்­போதும் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களை அவ்­வாறே பேணி வரு­கின்­றார்கள்.
வர­வேற்­பினை அரே­பிய மொழியில் எழு­து­கின்­றார்கள். இந்த நிலை­மைகள் தவிர்க்­கப்­பட வேண்டும். தமிழ் அர­சியல் பிர­தி­நி­தி­களும் இந்த விட­யத்­தினை பயன்­ப­டுத்தி அர­சியல் செய்­வதைக் கைவிட வேண்டும்.
முஸ்லிம் சம­யத்­த­லை­வர்­களும் இந்த விட­யத்­தினை கவ­னத்தில் கொள்ள வேண்டும். அரே­பிய சிந்­த­னை­களைத் தவிர்த்து இலங்­கைக்குள் வாழும் அனை­வரும் இலங்­கை­யர்கள் என்ற மனோ­நி­லையை உரு­வாக்க வேண்டும்.
கேள்வி:- கிழக்கில் ஊர்­காவல் படை­யொன்றை ஸ்தாபிப்­பது பற்றி பேசப்­ப­டு­கின்­றதா?
பதில்:- ஊர்­கா­வற்­படை ஸ்தாபிப்­பது குறித்த பேச்­சுக்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. ஆனால், ஒரு இனத்­துக்கு எதி­ராக பிறி­தொரு இனத்­தினை பயன்­ப­டுத்­து­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது. ஆகவே அந்த விடயம் அவசியமில்லை என்பதை தமிழ் இளைஞர்களுக்கு கூறியுள்ளதோடு கடந்த காலத்தினை உதாரணப்படுத்தி இத்தகைய விடயங்களில் சிக்கவிடக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.
கேள்வி:- தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கிடையிலான ஐக்கியம் சம்பந்தமாக பேசப்படுகின்ற நிலையில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- குண்டுத் தாக்குதலின் பின்னர் தான், பல தமிழ்ப் பிரதிநிதிகள் இதுபற்றி அதிகம் சிந்திக்கின்றார்கள். கிழக்கில் உருவாக்கப்படும் தமிழர் கூட்டமைப்பு தொடர்பில் எம்முடன் சிவில் பிரதிநிதிகள் கலந்துரையாடினார்கள்.
நாம் அதற்கு தயாராகவே உள்ளோம். எம்மைப் பொறுத்தவரையில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் எமது தமிழ்ச் சமூகத்தினை காப்பாற்றக்கூடிய தலைமைகள் யாராக இருந்தாலும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றே கருதுகின்றேன். அரசியல் கட்சியை ஸ்தாபித்து செயற்படுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.
அதற்காக நாம் மட்டும் தான் என்ற கருத்தினை மையப்படுத்த முடியாது. ஒரு கட்சியை அழிக்கும் வகையில் செயற்பட முடியாது. ஆகவே கொள்கை அடிப்படையில் கிழக்கில் தமிழர் கூட்டமைப்பு கட்டியெழுப்பப்படுமாகவிருந்தால் அதில் பங்கேற்கவும் முழுமையாக வரவேற்கவும் தயாராகவுள்ள முதல் நபராக நானே இருப்பேன்.
கேள்வி:- முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங் கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் உங்களுடைய நிலைப்பாடு எவ்வாறு உள்ளது?
பதில்:- தீவிரவாத அச்சுறுத்தலி லிருந்து நாட்டை பாதுகாக்கும் ஒருவர் ஆட்சியில் அமரவேண்டும் என்ற சிந்தனை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆகவே அத்தகைய
வொரு தலைமையை ஏற்றுக்கொள் வதற்கு நாமும் தயாராகவே உள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போரை தலைமைத்தாங்கி நடத்திய இராணுவத்தளபதிக்கு வாக்களிக்குமாறு கூறியது.
அப்படியிருக்கையில், இராணுவச் சீருடையை அணியாத பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஒருவருக்கு ஏன் ஆதரவளிக்க முடியாது. இதுபற்றிய தெளிவும் மக்களுக்கு உள்ளது

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies