மீண்டும் மீண்டும் மைத்திரி சொல்லும் கதை; உண்மையா? பொய்யா? மக்கள் குழப்பம்!
31 May,2019
இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்படி கடந்த ஏப்பிரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் நடந்த தற்கொலைத் தாக்குதல்கள் குறித்து தான் அறிந்திருக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றைப் பகிர்ந்த மைத்திரி, கடந்த மாதம் 19 ஆம் திகதி நடந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களின் கூட்டத்தில் கூட தாம் இதுபற்றி அறிவுறுத்தப்படவில்லையென தெரிவித்துள்ளார்.
Maithripala Sirisena
✔
@MaithripalaS
ආරක්ෂක මණ්ඩලයේ කරුණු නොනිල ලෙස මාධ්ය තුළ පළ වූ බැවින් ව්යුහය වෙනස් කොට ජාතික ආරක්ෂක කමිටුව පිහිටුවා සති දෙකකට වරක් රැස් විය.
19/4/8 ජ්යෙෂ්ඨ පොලිස් නිළධාරින්ගේ රැස්වීමේ දී ද 21ප්රහාරය පිළිබඳව මා වෙත දැනුවත් කිරීමක් සිදු නොවීය.
මා දැනුවත් කළ බවට පළ වන වාර්තා ප්රතික්ෂේප කරමි.
278
12:31 PM – May 30, 2019
Twitter Ads info and privacy
307 people are talking about this
இதேவேளை ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி கருத்தைத் தெரிவித்திருந்த நிலையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் பதவியிலிருந்து விலக்கவைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தன்னை பதவியிலிருந்து நீக்கியமை சட்ட விரோதமானது என்று உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தற்பொழுது மீண்டும் ஜனாதிபதி அதே கருத்தை வலியுறுத்திக் கூறியுள்ளதால் தென்னிலங்கை பாதுகாப்புத் துறையில் சிறு அதிர்வலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.