தமிழ் பெயரில் பூசகருக்கு உதவியாளராகயிருந்தவரின் அறையில் கருத்தடை மாத்திரைகள்,180 பெண்களின் புகைப்படங்களும் சிக்கின
28 May,2019
மூதூர் கிளிவெட்டி கோயில் பூசகருக்கு உதவியாக இருந்தவரின் கையடக்கதொலைபேசியில் மூதூர் கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த 180 பெண்களின் புகைப்படங்களும் அவரது அறையில் கருத்தடைமாத்திரை அடங்கிய மூன்றுஅட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தின் பூசகருக்கு உதவியாக இருந்த சிவா என அழைக்கப்படும் புஹாரி முகமது லாகீர் இரண்டு வருடகாலமாக பூசகருக்கு உதவியாளராக இருந்து கோயிலில் பூசை நேரத்தில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரையை கலந்துகொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மூதூர் பொலிசாரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளிலேயே அவர் தங்கியிருந்த அறையிலிருந்து 03 கருத்தடைமாத்திரைஅடங்கியஅட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அவர் ஒரு இஸ்லாமியர் என்பதற்கு ஆதாரமாக திருக்குர்ஆன் நூலும் தொப்பியும் கண்டு எடுக்கப்பட்டுள்ளதாகதகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. .
புலனாய்வு பிரிவினர் அவரிடமிருந்த கையடக்கதொலைபேசியை பரிசீலித்தபோது கிளிவெட்டி மற்றும் அயல் கிராமங்களைச் சேர்ந்த 180 பெண்களின் புகைப்படங்களைஅவர் தனது கையடக்க தொலைபேசியில் சேமித்து வைத்துள்ளார்.
ஏற்கனவே பல சமூக முரண்பாடான செயற்பாடுகளுக்காக நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மேற்படி நபர் ஒருதமிழ் பெண் உட்பட மூன்று பெண்களை மணம் முடித்தவர் என்பது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
கிளிவெட்டிமுத்து மாரியம்மன் ஆலயத்துக்குவரும் பக்தர்கள் பலருடன் நெருக்கமாக தொடர்புகொண்டுள்ள இவர் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரையை கலந்துகொடுத்தாரா என்பதுதொடர்பாக மூதூர் பொலிசாரும் புலனாய்வு பிரிவனரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
அவர் தன்னையொரு தனியார் துறை ஆசிரியர் என்று கூறிவந்துள்ள நிலையில் ஒரு மாணவியை பாலியல் வன்மத்துக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை திருமலை விகாரை வீதியிலுள்ள வீடொன்றில் கிழங்கு பொரி வியாபாரி ஒருவர் பொரி வியாபாரத்தில் கருத்தடைமாத்திரையை கலந்து பொருட்களை விற்றுள்ளார் என்ற தகவலுக்கு அமைய அவர் குடியிருந்த வீடு பொதுமக்களால் உடைத்தெரியப்பட்டுள்ளது.