கிழக்கில் முஸ்லிம் வர்த்தகரின் கடை தீக்கிரை;
28 May,2019
மட்டக்களப்பு, பார் வீதியிலுள்ள CCTV கெமராக்களை விற்பணை செய்யும் வர்த்தக நிலையமொன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
முகம்மட் சபீக் என்பவருக்கு சொந்தமான வர்த்தக நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
குறித்த இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த CCTV கமெராக்கள் மற்றும் இலத்திரணியல் உபகரணங்கள் என்பன முற்றாக எரிந்துள்ளன.
முப்பது இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் எரிந்துள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.
அத்துடன் அங்கிருந்த பிரதான ஹார்ட் டிஸ்க்கும் காணாமல் போயுள்ளது.
இது நாசகார செயலாக இருக்கலாமெனவும் இந்த வர்த்தக நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.