ஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ;
27 May,2019
வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ தளபதிக்கு உத்தரவிட்ட போதிலும் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.என மக்கள் தெரிவித்துய்யளர்.
இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாடாளாவிய ரீதியில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.எனினும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பார்க்க வடக்கில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகமாக காணப்படுகின்றன.
.பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு சொதனையிடப்படுகின்றனர்.பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகின்றது.
நாட்டில் பிற மாவட்டங்களை விட வடக்கில் மட்டும் அதிக கெடுபிடிகள் காணப்படுவதை தமிழ் அரசியல்வாதிகள் கடுமையாக கண்டித்தனர்.அத்துடன் பாராளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பில் சுட்டிக்காட்டி இருந்தனர்.எனினும் மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ பிரசன்னமோ கெடுபிடிகளோ குறைக்கப்படவில்லை.
இந்நிலையில் ஜனாதிபதி தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வடக்கில் ஏற்பட்டுள்ள இராணுவ கெடுபிடிகளை குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்ற ஜனாதிபதி கலந்துரையாடலில் பங்கேற்று இருந்த இராணுவ தளபதியிடம் உடனடியாக உத்தரவிட்டிருந்தார்.
எனினும் வடக்கில் குறிப்பாக பூநகரி,ஆனையிறவு,நாவற்குழி போன்ற பகுதிகளில் இராணுவத்தினர் பயண தடைகளை விதித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி உத்தரவிட்டும் மக்கள் இராணுவ கெடுபிடிக்குள் சிக்கியே வீதியில் பயனிகின்றமையை காணக்கூடியதாகவுள்ளது.