ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா தெரிவித்துள்ளது !

26 May,2019
 

 


 

வடக்கு முஸ்லிம்களை பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். முஸ்லிம் தலைமைகளையோ மக்களையோ தண்டிப்பதைக் கூட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அதனை அவர் கொள்கையாக ஏற்று இறுதிவரையில் உறுதியாக இருந்தார்.
எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஏப்ரல் 11இல் அறிவிக்கப்பட்டிருந்தது. சர்வதேச ஒத்துழைப்புடன் தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் அதுகுறித்த முழமையான விடயங்களை கண்டறியாத வரையில் இலங்கைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் தொடரும் நிலைமையே உள்ளது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் கூட தமது தாக்குதல்களை வெசாக், ஈஸ்டர் போன்ற பண்டிகை நாட்களில் நடத்துவதில்லை. தற்போதைய தாக்குதல் கல்வி கற்ற, செல்வந்தர்களால் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருக்கின்றது. இதனை திட்டமிடுவதற்கு இரண்டு ஆண்டுகளாவது தேவைப்பட்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வி வருமாறு,
கேள்வி:- ஈஸ்டர் தாக்குதல்கள் நிறைவடைந்து ஒருமாதமாகின்ற நிலையில் கிழக்கு மாகாண அன்றாட நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன?
பதில்:- தாக்குதல்கள் நடைபெற்று சரியாக ஒருமாதம் நிறைவடையும் தருணத்தில் கிழக்கு மாகாணம் மட்டுமன்றி முழு இலங்கையுமே அச்சமான சூழலுக்குள்ளே இருக்கின்றது.
தேசிய அளவில் ஊடுருவப்பட்டு இத்தகைய தாக்குதலொன்று நடத்தப்பட்டிருப்பதை அரசாங்கம், புலனாய்வு, படைத்தரப்பினர் அறிந்திருக்கவில்லை என்பது வேடிக்கையானதும், வேதனையானதுமான விடமாகும்.
அரசாங்கத்தின் ஒட்டுமொத்த தவறே இந்த தாக்குதல் இடம்பெறுவதற்கு காரணமாகவும் இருக்கின்றது. எந்தவிமான இலக்குமற்ற சர்வதேச முஸ்லிம் தீவிரவாதத்தின் பிடிக்குள் இலங்கையும் உள்ளாகியுள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் அன்றாட செயற்பாடுகளில் ரூடவ்டுபடுவதற்கு கூட மிகுந்த அச்சமாகியுள்ள நிலைமை தான் உள்ளது.
கேள்வி:- ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை திட்டமிடுவதற்கு குறிப்பிட்ட காலம் அவசியப்பட்டிருக்குமல்லவா?
பதில்:- விடுதலைப்புலிகள் கூட தங்களது தாக்குதல்களை வெசாக்ரூபவ் ஈஸ்டர் அல்லது பொதுமக்கள் ஒன்றுகூடும் தருணங்களில் மேற்கொள்வது கிடையாது. ஆனால் தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் அவ்வாறு இல்லை. பொதுமக்களை இலக்குவைத்து திட்டமிட்டே நடத்தப்பட்டிருக்கின்றது.
தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் கல்விகற்ற, செல்வந்தர்களே பங்கேற்றுள்ளார்கள். அவர்களின் மத்தியில் ஏற்பட்ட சிந்தனையில் இருந்து தான் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆகக்குறைந்தது இந்த தாக்குதல்களுக்கான திட்டமிடல்களுக்கு இரண்டு ஆண்டுகளாவது தேவைப்பட்டிருக்கும்.
கேள்வி:- இலங்கைக்கு தொடர்ந்தும் தீவிரவாத அச்சுறுத்தல் காணப்படுகின்றதா?
பதில்:- அரசாங்கமும், படைத்தரப்பும் நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டதாகவும் கைதுகளைச் செய்து விசாரணைகளைச் செய்கின்றோம் என்று கூறினாலும் சர்வதேச ஒத்துழைப்புடன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதால் அதுகுறித்த விடயங்களை முழுமையாக கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாத வரையில் தொடர்ந்தும் அச்சுறுதல் காணப்படுகின்றது என்று தான் கூறவேண்டியுள்ளது.
கேள்வி:- தாக்குதல்கள் குறித்த தகவல்கள் பாதுகாப்புத்தரப்பினால் முன்கூட்டியே அறியப்பட்டதாக கூறப்படுகின்றதே?
பதில்:- போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகளாக இலங்கைத்தீவிலே எந்தவிதமான வெடிச்சத்தங்களுக்கே இடமிருந்திருக்கவில்லை.
நாட்டின் தேசிய பாதுகாப்பும் சிறப்பாகவே இருந்தது. ஆனால் 2015இல் ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னர் தேசிய பாதுகாப்பு நலிவுற ஆரம்பித்தது.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்ட பின்னர் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் முழுமையாக உடைத்தெறியப்பட்டன. வாராவாரம் நடைபெறும் பாதுகாப்புச்சபை கூட்டத்தில் பிரதமர் ஆறுமாதமாக அழைக்கப்படவில்லை என்று தற்போது கூறுகின்றார். தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூறுவதலிருந்து விலகுவதற்காக தற்போது எனக்குதெரியாது என்று கூறி பந்துபரிமாற்றமே செய்கின்றார்கள்.
ஏப்ரல் 11ஆம் திகதி பொலிஸ்தலைமையகத்திலிருந்து தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அதில் கிழக்கினைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம்களே தாக்குதல்களை நடத்தப்போகின்றார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்தக்கடிதம் பிரபுக்களின் பாதுகாப்பு கட்டமைப்புள்ள அனைவருக்கும் அனுப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில் தற்போது யாருக்கும் தெரியாது என்று கூறுவதும் ஜனாதிபதிரூபவ் பிரதமர் தமக்குத்தெரியாது என்று கையை விரிப்பதும் தான் வேடிக்கையாக இருக்கின்றது.
கேள்வி:- பாதுகாப்புக்கான எச்சரிக்கை கடிதம் உங்களுக்கு கிடைத்தவுடன் அதுகுறித்த எவ்விதமான நடவடிக்கைகையையும் எடுக்கவில்லையா?
பதில்:- பொலிஸ் தலைமையத்திலிருந்து பிரபுக்கள் பாதுகாப்பான பிரிவினால் தான் அந்த்கடிதம் எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கே அனுப்பட்டிருந்தது. அவர்கள் அக்கடிதத்தினை என்னிடம் காட்டினார்கள்.
அவர்கள் குறித்த தினத்தில் என்னை வெளியில் செல்வதை தவிர்த்திருக்குமாறு கோரினார்கள். எனது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பட்டினையே அவர்கள் மேற்கொண்டார்கள்.
கேள்வி:- கிழக்கைச் சேர்ந்த இருவர் தாக்குதலில் ஈடுபடவுள்ளதாக கூறப்பட்டிருந்ததாக கூறினீர்களே?
பதில்:- ஆம், குறித்த கடிதத்தில் புதிய காத்தான் குடியைச் சேர்ந்த இரு முஸ்லிம் நபர்களான சஹ்ரான்ரூபவ் ரில்வான் ஆகியோர் தாக்குதலில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் எங்கு தாக்குதல்களை செய்யப்போகின்றார்கள் என்ற தகவல்கள் எதுவும் சொல்லப்பட்டிருக்கவில்லை. எமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கூறப்பட்டிருந்தது.
கேள்வி:- கிழக்கினைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்களில் ஈடுபடப்போகின்றார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்த நிலையில் நீங்கள் அம்மாகாணத்தினைச் சேர்ந்தவர், ஒரு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அதுகுறித்து ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியுமல்லாவா?
பதில்:- பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பான கட்டமைப்பின் தலைமை அதிகாரியால் அப்பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கட்டளையே அதுவாகும்.
அதுகுறித்து நாம் கேள்விகளை எழுப்ப முடியாது. ஆனால் எட்டு மாதங்களுக்கு முன்னதாக நான் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில்ரூபவ் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்பதை வெளிப்படுத்தியிருந்தேன்.
கேள்வி:- தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்ற விடயத்தினை எந்த அடிப்படையில் முன்வைத்திருந்தீர்கள்?
பதில்:- அரசாங்கம் நாட்டின் தேசிய புலனாய்வுக்கட்டமைப்பினை உடைக்கின்றார்கள். இதனால் தேசிய பாதுகாப்பு பாரிய அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். அதுமட்டுமன்றி இலங்கையினுள் ஐ.எஸ் தீவிர ஊடுருவல்கள் இருந்துள்ளதாகவும் காத்தான்குடியை மையப்படுத்திய சில அமைப்புக்களின் போக்குகளில் மாற்றங்கள் காணப்படுகின்றதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. ஆனால் அவை குறித்து அரசாங்கம் கவலையீனமாகவே இருந்துள்ளது.
கேள்வி:- இத்தாக்குதலுக்கு எத்தகைய வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன? அவற்றை உள்நாட்டில் இலகுவாக உற்பத்தி செய்திருக்க முடியுமா?
பதில்:- தீவிரவாதத்தின் முதலாவது தாக்குதலுக்கே விடுதலைப்புலிகள்ரூபவ் மற்றும் படையினர் பயன்படுத்திய அதியுச்ச சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.
படையினர் பயன்படுத்தும் ஆர்.டி.எக்ஸ் மற்றும் விடுதலைப்புலிகள் பயன்படுத்தும் சி -4 ஆகிய வெடிமருந்துகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை பாரியளவில் உபயோகிக்கப்பட்டுள்ளன.
இவை எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பதை முதலில் கண்டறிய வேண்டும். நிச்சயமாக இந்த வெடிபொருட்கள் வெளிநாட்டிலிருந்து தான் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அதுகுறித்த முழுமையான தகவல்களை பெறவேண்டியது அவசியமாகின்றது.
கேள்வி:- கிழக்கில் வஹாப் சிந்தனை தலைதூக்கப்பட்டு தற்போது மதத்தின் பெயரால் தீவிரவாதமாக உக்கிரமடைந்துள்ளது என்ற கருதுகோளை ஏற்கின்றீர்களா?
பதில்:- இதனை விரிவாக பார்த்தால், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு முஸ்லிம்கள் மறறும் சர்வதேச மட்டத்தில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு தவறாக பிரதிபலிக்கப்படுகின்றது.
குறித்த முடிவு எடுக்கப்பட்டபோது நானும் விடுதலைப்புலிகள் அமைப்பின் அங்கதவராக பணியாற்றிய ஒருவன் என்ற அதற்கான காரணத்தினை நன்கு அறிந்திருந்தேன்.
வடக்கு முஸ்லிம்களை பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் அன்று பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். விசேடமாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இனமுறுகலொன்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சிறந்த முறையில் திட்டமிட்டே அத்தகைய முடிவொன்றை எடுத்திருந்தார்.
தற்போதை அர்த்தப்படுத்தல்களின் பிரகாரம் விடுதலைப்புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்றால் பலம்பொருந்திய கட்டமைப்பினைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளுக்கு வடக்கில் வாழ்ந்த அத்தனை முஸ்லிம்களையும் அழிப்பதற்கு இருபது விநாடிகள் போதுமாக இருந்தது.
ஆனால் விடுதலைப்புலிகள் வடக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பில் கரிசனை கொண்டிருந்தமையால் தான் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினார்கள். தமிழ் முஸ்லிம் இன ஐக்கியத்தினை பேணுவதற்காகவே அந்த செயற்பாடு இடம்பெற்றிருந்தது.
அதேநேரம் காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களில் பல மர்மங்கள் உள்ளன. அதேபோன்று முஸ்லிம்களால் பல தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
ஆகவே பழைய விடயங்களை மீண்டும் கிளறிப்பார்க்க வேண்டியதில்லை. இருந்தாலும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட தமிழ் அரசியல் தலைவர்களும் சிறந்த வெளிப்பாடுகளையே காட்டிவந்துள்ளார்கள். தற்போது வரையில் அதனை பேணிக்கொண்டே வருகின்றார்கள்.
மேலும் இலங்கையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சமயத்தவர்களை மையப்படுத்தியே தற்கொலைத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அதனை விடுதலைப்புலிகள் மற்றும் முஸ்லிம் தரப்புக்கிடையிலான விடயத்தினை மையப்படுத்தி ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆரசியல் குளிர்காய நினைப்பவர்களே விடுதலைப்புகளை இத்தாக்குதலுடன் தொடர்பு படுத்த முனைகின்றார்கள். ஆகவே விடுதலைப்புலிகள் விடயத்தினை தவிர்த்து, சர்வதச தீவிரவாதம் என்ற அடிப்படையில் நோக்கினால் தான் இதனை முற்றாக களையலாம்.
விடுதலைப்புலிகள் அமைப்புடன் கருத்து முரண்பாட்டின் அடிப்படையில் நான் வெளியேறியிருந்தாலும் தலைவர் பிரபாகரன் மீது பொய்யாக ஒருபோதும் குற்றம்சாட்ட முடியாது. நான் இராணுவத்தளபதியாக செயற்பட்டிருந்த காலப்பகுதியில் ஒரு முஸ்லிம் நபரைக் கூட தண்டிப்பதற்கு எமக்கு உத்தரவிட்டதுமில்லை. அனுமதித்ததும் இல்லை. இறுதிவரையில் அவர் அவ்வாறான நிலைப்பாட்டுடன் தான் இருந்தார். அரசியல் குளிர்காய்வதற்காக உண்மைகளை மறைக்க முடியாது.
கேள்வி:- காத்தான்குடி, ஏறாவூர் சம்பவங்களின் பின்னர் ஹிஸ்புல்லா முஸ்லிம்களின் பாதுகாப்பதற்காக இலங்கை அரசிடமிருந்து ஆயுதங்களை பெற்றிருந்தார் என்பதை நீங்கள் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு அறிந்திருந்ததா?
பதில்:- ஆம், அது வெளிப்படையான தகவல். ஹிஸ்புல்லா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தான் முஸ்லிம் ஊர்காவல் படை உருவாக்கப்பட்டது. இதற்கு இலங்கை அரசாங்கமே ஆயுதங்களை வழங்கியிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட ஆயுதங்களின் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ் பெண்கள் பதிப்புக்குள்ளானார்கள்.
கேள்வி:-ஹிஸ்புல்லா தனது தலைமையில் மீராவோடை, மாஞ்சோலை கிராமங்களில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்ட பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுத்தபோது விடுதலைப்புலிகள் அவரை இலக்கு வைத்ததாக கூறுகின்றரே?
பதில்:- முஸ்லிம் தலைவரை இலக்கு வைப்பதையோ முஸ்லிம் மக்களின் மத்தியில் பதற்றத்தினை ஏற்படுத்துவதையோ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை.
அதனை கொள்கையாகவும் வகுத்து பற்றுறுதியாக செயற்பட்டு வந்திருந்தார். தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அவர் என்றுமே விரும்பியது கிடையாது அதுவே அவருடைய முடிவாகவும் இருந்தது.
இதனைவிடவும் தமிழ் முஸ்லிம் இன உறவைப் பேணுவதற்கான பலபேச்சுக்கள் விடுதலைப்புலிகளுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்றிருந்தது.
குறிப்பாக மு.கா தலைவர் ஹக்கீமை வன்னிக்கு அழைத்து தலைவர் பிரபாகரன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். அப்பேச்சுக்களின்போது நானும் கலந்துகொண்டிருந்தேன்.
அதன்போது தலைவர் பிரபாகரன் நாங்கள் உரிமைகளுக்காக போராடுகின்றோம். நீங்களும் தமிழ் பேசுகின்ற சமுகம் ஆகவே உங்களுக்கு தேவையான ஒத்தாசைகளை வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம் என்று தான் ஹக்கீமிடம் கூறினார். மாறாக முஸ்லிம்களுக்கும் தானே தான் தலைவர் என்று கூறவில்லை.
கேள்வி:- கிழக்கு ஆளுநராக இருக்கும் ஹிஸ்புல்லாவின் அரசியல் நகர்வுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- கிழக்கு மாகாணத்தில் ஹிஸ்புல்லா, அலிசாஹிர் மௌலானா, அமீர் அலி என அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளுடன் நீண்ட காலமான நட்பு உறவுகள் எனக்கு உள்ளன. ஆனால் அரசியல் ரீதியாக முஸ்லிம் ஏகாதிபத்தியத்தினை நான் எதிர்த்தே வந்திருக்கின்றேன்.
ஹிஸ்புல்லாவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டவுடன் அதற்கு எதிராக கையெழுத்து வேட்டையை நடத்தினேன். இரண்டாயிரம் கையொப்பத்துடன் அவரை நீக்கும் கோரிக்கையை ஜனாதிபதி,பிரதமருக்கு அனுப்பி வைத்தபோதும் அதற்கு இதுவரையில் எவ்விதமான பதிலும் அளிக்கப்படவில்லை.
முன்னதாக பல்கலைக்கழகத்தினை நிர்மானிப்பதற்கான ஆரம்பச் செயற்பாடுகளை முன்னெடுத்தபோதே நான் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தேன்.
ஹிஸ்புல்லா அதிகாரத்தினை பயன்படுத்தி காணி சுவீகரிப்புக்கள், அரச நியமனங்களை பெருமளவில் செய்து வருகின்றார். குண்டுவெடிப்பின் சூத்திரதாரியான சஹ்ரானுடன் கைலாகு கொடுத்திருக்கின்றார்.
ஓட்டமாவடியில் இந்துக்கோவிலுக்கான காணி சுவீகரிப்பு, அமைச்சு அதிகாரத்தினைப் பயன்படுத்தி நீதிபதியை இடமாற்றியமை ஆகியவற்றை பகிரங்கமாகவே மேற்கொண்டுள்ளார். இவ்வாறு அதிகாரத்தினை கோலோச்சுவதற்காக பயன்படுத்தும் ஒருவர் ஆளுநராக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆனால் இத்தனை விடயங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிந்திருந்தோம் அவர் மீது எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்காமலிருக்கின்றார். அதற்கான பின்னணியை எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
கேள்வி:- ஒக்டோபர் 26 அரசியல் புரட்சிக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை நிராகரித்தமையின் எதிரொலியாகவே கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றதே?
பதில்:- அதுவொரு புறமிருக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைபிடமும் தவறுகள் உள்ளன. கிழக்கில் தீவிரவாதம் தோன்றுவதற்கு கூட்டமைப்பே அத்திவாரமிட்டது. கிழக்கு மாகாணத்தில் ஏழு ஆசனங்களைக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸிடம், 11ஆசனங்களைப் பெற்றிருந்த கூட்டமைப்பு ஆட்சியைக் கையளித்தது. ஹாபீஸ் நஸீர் முதலமைச்சராகி பாரிய ஆதிக்கத்தினைச் செலுத்தினார்.
அப்போது கூட்டமைப்பு தட்டிக்கேட்கவில்லை. குண்டுத்தாக்குதலின் பின்னரே கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குரலெழுப்புகின்றார்கள்.
அன்று நாங்கள் வீதியிலிறங்கிப்போரடிய போது இவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். கருத்துக்களை முன்வைப்பதற்கு திராணி இருந்திருக்கவில்லை. கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சரி அதிலிருந்து வெளியேறியவர்களும் சரி தவறுகளைச் செய்துவிட்டு இப்போது கோசமிடுவதால் பயனில்லை.
(நேர்காணல்:- .ராம்

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies