அமெரிக்க வாழ் இலங்கையர்களால் பாதுகாப்பு கருவிகள் வழங்கிவைப்பு
22 May,2019
தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டள்ள பாதுகாப்பு தேவையை கருத்திற்கொண்டு அமெரிக்க வாழ் இலங்கையர்களால் இராணுவ பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் வேண்டுகோளிற்கிணங்க 20 ஆயுதங்களை கண்டறியும் கருவிகள் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இக் கருவிகளை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்து வழங்கி வைத்தார்.
மேலும் தேவைக்குறிய அதி நவீன கருவிகள் பதவிநிலைப் பிரதானியவர்கள் 2010 -2015ஆம் ஆண்டு காலப் பகுதியில் தூதுவராகவும் மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக காணப்பட்ட வேளை நன்கொடையாளர் மற்றும் இவரிடையேயான நல்லிணக்கத்தின் காரணமாக வழக்கப்பட்டுள்ளன.
மேலும் நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு பதவிநிலைப் பிரதானியவர்களுக்கு நாடளாவிய ரீதியில் காணப்படும் இராணுவத்தினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.