புர்க்காவையும் நிக்காப்பையும் இனிமேல் அணியமுடியாது; மீண்டுமொரு தடை!
22 May,2019
கேகாலை மாவட்டம் அரநாயக்க பிரதேச சபையில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்க்கா மற்றும் நிக்காப் ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுதொடர்பான தீர்மானம் சபையில் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சுரவீர கொண்டுவந்ததுடன் இதனை பிறிதொரு உறுப்பினரான ரிபாய் வழிமொழிந்தார்.
இன்று காலையில் தவிசாளர் நிஹால் செனவிரத்தினவின் தலைமையில் சபை கூடியது. அரநாயக்க பிரதேச சபை ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளபோதிலும் பொதுஜன பெரமுன கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு சபையில் ஆதரவு கிடைத்தது.
இதனடிப்படையில் அரநாயக்க பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இனிமேல் முஸ்லிம் பெண்கள் புர்க்கா மற்றும் நிக்காப் என்பவற்றை அணியமுடியாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக சபையில் சொல்லப்பட்டது.