ஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர் ;
20 May,2019
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் புதல்வரான ஹிராஷ் ஹிஸ்புல்லாவே மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவராக செயற்படுகின்றார். பாராளுமன்ற கண்காணிப்பு குழு முன் அவர் அளித்த விடயங்களையும் மையப்படுத்திய முழுமையான அறிக்கை ஜுலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படு என பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம் பெற்ற சந்திப்பின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு மேற்கணடவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்
பேராசிரியர் ரங்திவெல தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவினர் பல்கலைக்கழகம் தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கையில் ஷரியா பல்கலைகழத்திற்கான ஹிரா மன்றம் என்ற பெயரிலே பதிவு செய்வதற்கான விண்ணப்படிவம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . இதன் பின்னரே இந்த பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வறான பல விடயங்கள் பாராளுமன்ற கண்காணிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாராளுமன்ற கண்காணிப்பு குழுவினர் இந்த பல்கலைகழகத்தின் தற்போதைய தலைவர் ஹிராஷ் ஹிஷ்புல்லாவிடம் தொடர்ந்து பெற்றுக் கொண்ட விசாரணைகளை முன்னெடுத்தது. கிடைக்கப் பெற்ற அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட முழுமையான அறிக்கை ஜீலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இந்த பல்கலைக்கழகம் அரசாங்கத்தின் நேரடிய கண்காணிப்பில் செயற்படுகின்ற ஒரு தனியார் பல்கலைக்கழகமாக தொழிற்பட வேண்டும்.அத்துடன் இந்த பல்கலைக்கழகம் தொழினுட்ப பல்கலைக்கழகமாக முழுமையாக செயற்படுதல் அவசியம். என்றார்.