வெல்டி அடித்த இராணுவத்தளபதி; !
17 May,2019
எனக்கு அமைச்சர் ரிஷாட் பதியூதீன் அழுத்தம் கொடுத்ததாக கூறமுடியாது, கோரிக்கை என கூறலாம் என இராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு முதலாவது காரணமாக, அவர் இராணுவ தளபதிக்கு அளுத்தம் கொடுத்ததாக கூறப்படுவது தொடர்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் வழங்கிய இராணுவ தளபதி, அதனை அழுத்தம் கொடுத்ததாக கூறமுடியாது, கோரிக்கை என கூறலாம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் வெவ்வேறு தரப்பினர் வெளியிடும் கருத்துக்களுக்கு செவி சாய்க்காது, பாதுகாப்பு பிரிவு வெளியிடும் கருத்துக்களை மாத்திரம் ஏற்றுக்கொள்ளுமாறு இராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.