இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நடக்கும் சம்பவம்; !
17 May,2019
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு 762 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில், 762 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
கைதிகளை விடுதலை செய்வதற்கான நிகழ்வு வெலிக்கடை சிறைச்சாலை மைதானத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள் ஆகியவற்றுக்காக தண்டனை அனுபவிக்கும் கைதிகளைத் தவிர்த்து ஏனைய சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவிக்கும் கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.
சிறைச்சாலைகள் வரலாற்றில் அதிக கைதிகள் ஒரே தடவையில் விடுதலை செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது