எரித்து நாசமாக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்து!
15 May,2019
நேற்று தென் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகளில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் பல சேதமாக்கப்பட்டன.
குறிப்பாக, கம்பகா மாவட்டத்தில் உள்ள மினுவாங்கொட நகரில் உள்ள 700 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான உணவு பதனிடும் தொழிற்சாலை ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.