முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம் சிங்கள மக்களின் வீட்டுத்திடடம்
14 May,2019
முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறி இருக்கின்ற சிங்கள மக்களது வீட்டுத்திடட பிரச்சினைக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மாவடட முகாமையாளர் மேலதிக மாவடட செயலாளர் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் காணி உத்தியோகத்தர் நில அளவை திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு மாவடட செயலாளர் குறித்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்விடங்களை பார்வையிட்டு குறித்த பகுதியில் உள்ள காணிகளை அடையாளப்படுத்தி குறித்த இடத்தில் அமைந்துள்ள பாடசாலையுடனான சுமார் 3 ஏக்கர் காணியில் ஒருவருக்கு தலா 6 பேச் காணியில் 62 வீடுகள் அமைக்க மக்களது சம்மதத்துடன் அனுமதி அளித்தார்
இந்த விடயம் குறித்து மேலும் அறியவருவதாவது
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அத்துமீறி குடியேறி இருக்கின்ற நீர்கொழும்பு பகுதி சிங்கள மக்கள் தமக்கான வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 11.05.2019 இடம்பெற இருந்ததாகவும் அந்த நிகழ்வை முல்லைத்தீவு மாவடட செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச செயலகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களும் இணைந்து தடுத்து நிறுத்தி உள்ளதாக குற்றம் சுமத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்
1934 ஆம் ஆண்டு முதல் தங்களுடைய மூதாதையர்கள் இங்கு வந்து தொழில் செய்து வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து தாங்களும் இங்கு வாழ்ந்து வருவதாகவும் கடந்த 30 வருட யுத்தத்தின் போதும் தாங்கள் இந்த இடத்திலேயே இருந்ததாகவும் தெரிவித்த மக்கள் 1982 ஆம் ஆண்டு தமக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 62 வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்பட்டதாகவும் அந்த வீடுகளின் அத்திவாரங்கள் தற்போதும் இருப்பதாகவும் அந்த இடத்தில் தமது வீடுகளை நிர்மாணிப்பதற்கு பல்வேறு முயற்சிகளின் மத்தியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் தம்மில் ஒரு தொகுதியினருக்கான வீட்டுத் திட்டத்தை இன்று ஆரம்பிக்க இருந்ததாகவும் முல்லைத்தீவு மாவடட செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச செயலகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களும் இணைந்து தடுத்து நிறுத்தி உள்ளதாக குற்றம் சுமத்தி குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தமக்கு 30 வருடங்களுக்கு மேலாக வீட்டுத்திட்டம் இல்லாமல் தாம் தகரக் கொட்டகைகளில் பல்வேறு துன்பங்களோடு வாழ்ந்து வருவதாகவும் தமக்கான விடுதலை பெற்றுத் தருவதற்கு ஜனாதிபதி பிரதமர் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிடடவர்கள் முன்வரவேண்டும் எனவும் தெரிவித்ததோடு எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் தங்களுக்கான உறுதியான தீர்வு வழங்கப்படாவிட்டால் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்
குறித்த விடயம்தொடர்பாக வன்னி மாவடட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவிடம் வினவிய போது குறித்த முகத்துவாரம் பகுதியானது பிரிட்டிஷ் காலத்து உறுதியோடு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட காணியாக இருக்கின்றது அதனுடைய உறுதிகள் தமிழ் மக்களது கைகளில் இன்றும் இருக்கிறது தமிழ் மக்கள் நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக அங்கிருந்து இராணுவத்தால் வெளியேற்றப்பட்ட பின்னர் அங்கு குடியேறிய குடும்பங்கள் இன்று வீட்டுத்திடட்டும் கோருகின்றனர்
குறித்த காணிகள் அனைத்தும் வயல் காணிகள் இந்த காணிகளில் சடடப்படி வீடுகள் அமைக்க முடியாது இருந்தும் தகர கொட்டில்களை அமைத்துசடடவிரோதமாக ஆரம்பத்தில் குடியேறியவர்கள் இப்போது வீடு கோருகின்றனர்
அத்துமீறி தமிழ் மக்களது காணிகளில் குடியேறி இருக்கின்ற மக்களுக்கு வீடுகளை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது இவர்கள் குடியேறும் போது தமிழ் மக்களால் தடுக்கக்கூடிய நிலை இல்லை காரணம் நாட்டில் நிலவிய யுத்தம் . தற்போது யுத்தம் நிறைவடைந்த நிலையில் தமிழ் மக்கள் தமது காணியை கோருகின்றனர் இந்நிலையில் அத்துமீறி குடியேறியுள்ளவர்களுக்கு வீடு வழங்கதேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முற்படுகின்றனர் ஆனால் அந்த காணிகளுக்கு ஏற்கனவே தமிழ் மக்களுக்கு பிரிட்டிஷ் காலத்து உறுதிகள் காணப்படுகின்றன இவற்றை எவ்வாறு அவர்களுக்கு வழங்குவது அதனாலேயே இதனை தடுத்து நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டேன் இவ்வாறே எமது பூர்விக பூமியான மணலாற்றையும் இன்று அவர்கள் ஆக்கிரமித்திருக்கின்றனர் என வன்னி மாவடட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மாவடட செயலகத்தை முற்றுகையிடுவதாக கூறியதற்கு அமைவாக கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறி இருக்கின்ற சிங்கள மக்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இன்று காலை பத்து மணியளவில் முல்லைத்தீவு மாவடட செயலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் குறித்த விடயம் தொடர்பில் மாவடட செயலருடன் கலந்துரையாட மாவடட செயலகத்துக்குள் நுழைய முற்பட்ட போது மாவடட செயலக வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்
இதனை தொடர்ந்து போலீசார் சென்று மாவடட செயலருடன் கலந்துரையாடி 3 பேரை கலந்துரையாட அனுமதித்தனர் சுமார் ஒரு மணிநேர கலந்துரையாடலை தொடர்ந்து இருக்கின்ற சிக்கல் நிலைமைகளை கூறி ஒருவார கால அவகாசத்தில் இதற்கான தீர்வு தொடர்பில் தெரிவிப்பதாக தெரிவித்து இருந்ததாகவும் இருப்பினும் மக்களுடன் கலந்துரையாடுமாறு மக்கள் கேடடதற்கு இணங்க மாவடட செயலாளர் போராடட காரர்களை வந்து சந்தித்து குறித்த விடயத்தை தெரிவித்தார்
இதனை ஏற்க முடியாதெனவும் உடனடியாக தீர்வு வேண்டுமெனவும் அரச அதிபரை மக்கள் கடும் தொனியில் எச்சரிக்கை மாவடட செயலாளர் குறித்த இடத்தை விட்டு சென்றார்
இருப்பினும்போராடட காரர்களது பிரதிநிதிகள் மாவடட செயலாளரை சந்திக்க சென்ற வேளையில் இருந்து ஏனைய மக்கள் மாவடட செயலக வாயிலை மறித்து போராடடத்தில் ஈடுபாடடனர் இருப்பினும் போலீசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது
இறுதியில் மாவடட செயலரை மீண்டும் சந்தித்த பிரதிநிதிகள் மாவடட செயலாளர் இன்று மாலை குறித்த இடத்துக்கு நேரில் வருகைதருவதாக அளித்த உறுதிமொழியை தெடர்ந்து போராட்ட காரர்கள் கலைந்து சென்றனர்
இந்நிலையில் உறுதிமொழி அளித்ததற்கு அமைவாக இன்று மாலை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மாவடட முகாமையாளர் மேலதிக மாவடட செயலாளர் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் காணி உத்தியோகத்தர் நில அளவை திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு மாவடட செயலாளர் குறித்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்விடங்களை பார்வையிட்டு குறித்த பகுதியில் உள்ள காணிகளை அடையாளப்படுத்தி குறித்த இடத்தில் அமைந்துள்ள பாடசாலையுடனான சுமார் 3 ஏக்கர் காணியில் ஒருவருக்கு தலா 6 பேச் காணியில் 62 வீடுகள் அமைக்க மக்களது சம்மதத்துடன் அனுமதி அளித்தார் இதற்க்கு மக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.