சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.
14 May,2019
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 164.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ள 5 ஆவது கட்ட கடன் தொகையாக இது வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கை மத்திய வங்கி அந்நிய செலவாணி கையிறுப்புக்கான திட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்காமையினால் இந்த கடன் தொகை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டிருந்தது.
தற்பொழுது அந்நிய செலவாணி தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அந்நிய செலவாணி கையிருப்பு தொடர்பான நடைமுறைகளில் திருப்தி கொண்டிருப்பதினால் சர்வதேச நாணய நிதியம் இந்த தொகையை விடுவிப்பதற்கு முன்வந்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி நிர்வாக பணிப்பாளரும் சபையின் பதில் தலைவருமான மிட்சுஹிரு புருஸ்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.