கட்டளையை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு : சாரதி பலி
11 May,2019
கடற்படையினரின் கட்டளையை மீறி பயணித்த காரின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் கார் சாரதி உயிரிழந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
வத்தளை, ஹுனுப்பிட்டிய பகுதியில் கடற்படையினர் குறித்த காரை சோதனை செய்வதற்காக வழிமறித்த போது, கட்டளையை மீறி பயணித்த வேளை காரின் மீது கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதிலேயே கார் சாரதி உயிரிழந்துள்ளார்.
இதன்போது 34 வயதுடைய காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.