இலங்கை தேவாலய தாக்குதல்: பலி எண்ணிக்கை 258 ஆக அதிகரிப்பு
09 May,2019
இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து இலங்கை முழுவதும் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு, பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழலில், ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் உள்ள ஷாங்க்ரி லா நட்சத்திர ஓட்டலில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், காயம் அடைந்து சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க வர்த்தகத்துறை அதிகாரி ஷெல்ஷி டெகாமினாடா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன்மூலம் இலங்கை தற்கொலைப்படை தாக்குதலில், உயிரிழந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.