சமூக ஊடகங்கள் மீண்டும் முடங்கின
06 May,2019
நீர்கொழும்பு பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக நாடளாவிய ரீதியில் சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
மக்களின் மத்தியில் தவறான செய்திகள் பரவுவதைத் தடுக்கவே அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து சமூக ஊடகங்கள் சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கும் உட்பட்ட பிரதேசத்தில் இன்று காலை 7 மணி வரை பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை நீர்கொழும்பு பலகத்துறை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் அப்பிரதேசத்தில் காணப்படும் பல வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.