சஹரான் ஹாசீமின் மைத்துனர் உள்ளிட்ட இருவர் சவுதி அரேபியாவில் கைது
05 May,2019
இலங்கை தற்கொலை குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மொஹமட் சஹரான் ஹாசீமின் மைத்துனர் உள்ளிட்ட இருவர் சவுதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது
இந்திய புலனாய்வு துறை அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பின் பின் இந்திய உளவுத்துறை கடும் விசாரணைகளை நடத்திவருகின்றது அதன் அடிப்படையில் ,கேரள ,தமிழ்நாடு போன்ற இடங்களில் சஹரான் ஹாசீமின் தொடர்பில் இருந்தவர்கள் என்று கூறி பலரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.