இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி – இஸ்லாமிய சேனலுக்கு தடை !
02 May,2019
இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகான நடவடிக்கைகளில் ஒன்றாக இலங்கை அரசு இஸ்லாமிய தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு தடைவிதித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்தவெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை 253 பேர் வரை உயிர் இழந்துள்ளனர் என்றும் மேலும் 500 பேருக்கும் மேற்பட்டோர்
இதையடுத்து தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இலங்கையின் உள்நாட்டு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு தொடர்பிருக்கலாம எனவும் இலங்கை அரசு சந்தேகப்படுகிறது. இதனால் புர்காவை பயன்படுத்தி உலவுகிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கையில் முகத்தை முழுதாக மூடி புர்கா அணிவது தடை செய்யப்பட்டிருக்கிறது
இந்நிலையில் நடவடிக்கைகளின் ஒருப்பகுதியாக இலங்கை அரசு துபாய் நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் இஸ்லாமிய அறிஞர் ஜாஹிர் நாயக் நடத்தும், பீஸ் டிவி என்ற சேனலுக்கு தடை விதித்துள்ளது. இந்த தொலைக்காட்சி சேனல் நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட பீஸ் டிவிக்கு இந்தியா, பங்களா தேஷ் ஆகிய நாடுகள் தடைவிதித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த குண்டுவெடிப்பு சம்மந்தமாக 40 பேருக்கும் மேற்பட்டோர் குண்டுவெடிப்பு சம்மந்தமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவரிடம் ஜாஹிர் நாயக்கின் வீடியோக்கள் இருந்ததாகவும் அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.