முல்லைத்தீவின் இரண்டு கிராமங்கள் படையினரால் சுற்றிவளைப்பு!
28 Apr,2019
முல்லைத்தீவு மாவட்டத்தின் இரண்டு கிராமங்கள் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் நகர் பகுதி மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று (27) அதிகாலை தொடக்கம் முல்லைத்தீவில் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் கிராமங்களான முள்ளிவளை ஹிஜ்சிராபுரம் மற்றும் முல்லைத்தீவு உண்ணாப்புலவு வரையான பகுதிகளில் படையினர் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது வீட்டிலுள்ள உரிமையாளர்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது புல்மோட்டையினை சேர்ந்த நபர் ஒருவர் ஹிஜ்சிராபுரத்தில் தங்கி இருந்த வேளை அவரை படையினர் கைதுசெய்துள்ளதுடன் அதே கிராமத்தில் மற்றும் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து முள்ளியவளை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள் கைதுசெய்யப்பட்ட நபர்கள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.