தவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்..
24 Apr,2019
“இஸ்லாமியர்களான நாங்கள் இந்த அரசுக்கும் கடந்த அரசுக்கும் இந்த தவ்பிக் ஜமாத் குறித்து விபரங்களை கொடுத்துள்ளோம்” – புலனாய்வுத் துறை தமது தேவைக்காக இவர்களை பயன்படுத்தியது – அசாத் சாலி-
அசாத் சாலி: “இஸ்லாமியர்களான நாங்கள் இந்த அரசுக்கும் கடந்த அரசுக்கும் இந்த தவ்பிக் ஜமாத் குறித்து விபரங்களை கொடுத்துள்ளோம். புலனாய்வு துறையில் இருந்தார்கள் சாலே மற்றும் அவரது சீடர் மொகமட். இவர்கள் இருவரையும் இப்போது கூட இங்கு அழைத்து கேளுங்கள். நாங்கள் தவ்பிக் ஜமாத் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தவில்லையா என்று? (தவ்பிக் ஜமாத் புகைப் படங்களைக் காட்டுகிறார்) இவை குறித்து 31/2 – 4 வருடங்களாக விபரங்களை கொடுத்து வருகிறோம். அனைத்து அரசுகளுக்கும் கடிதங்களை கொடுத்தோம். இவர்களை இல்லாமல் செய்யச் சொன்னோம். இவர்கள் பொல்லுகள் மற்றும் வாள்களோடு வருகிறார்கள். காத்தான்குடியில்”
சத்துர இடைமறிக்கிறார் : புலனாய்வு துறையினருக்கா கொடுத்தீர்கள்?
அசாத் சாலி : “புலனாய்வு துறையினருக்கு கொடுத்தோம். பாதுகாப்பு செயலர்கள் மூவருக்கு கொடுத்துள்ளோம்.”
சத்துர : இந்த அரசில் 4 பாதுகாப்பு செயலர்கள் இருந்தார்கள். இந்த அரசில் இருந்த பாதுகாப்பு செயலர்களுக்கா? கடந்த அரசில் இருந்தவர்களுக்குமா?
அசாத் சாலி : “கடந்த அரசில் இருந்தவருக்கும்தான் கொடுத்தோம்”
சத்துர : பாதுகாப்பு செயலளாளராக இருந்த கோத்தாபய ராசபக்ச அவர்களுக்கும் கொடுத்தீர்களா?
அசாத் சாலி : அவர்தான் தவ்பிக் ஜமாத் அமைப்பை பாதுகாத்தவர். இதை பொறுப்போடு சொல்கிறேன். அவர் பாதுகாத்தார் என்பதை சாலேயை அழைத்து வந்து கேட்டால் சொல்வார். அந்த அரசாங்கம்தான் இவர்களை பாவித்தது. பழைய வீடியோக்கள் இருந்தால் எடுத்து பாருங்கள்?
மாளிகாவத்தை தவ்பிக் ஜமாத்திலிருந்து ஒரு ஊர்வலம் போய்க் கொண்டிருக்கும் போது பஞ்சிகாவத்தையில் பொலிசார் தடுத்து நிறுத்தினார்கள் என்பது நினைவிருக்கலாம். உடனே மேலிடத்திலிருந்து கட்டளை வருகிறது அவர்களை தொடர்ந்து போக விடுமாறு. இவர்கள் எங்கே போனார்கள் ? கோட்டை புகையிர நிலையம் வரை சென்றார்கள்.
பெண்களை இணைத்துக் கொண்டு ஆண்கள் – பெண்கள் சேர்ந்து பெண்கள் எதிர்ப்பு ஊர்வலம் என இஸ்லாமியர்கள் எங்கே போயுள்ளார்கள் என்று காட்டுங்கள்? அப்படி பெண்கள் போனதில்லை. ஆண்கள் போயுள்ளார்கள். பெண்கள் போனதில்லை.இந்த தவ்பிக் ஜமாத் அமைப்பினர் புலனாய்வு துறையினரது தேவைக்காக சென்றார்கள்.