தேடப்பட்ட வாகனங்களை அதிரடியாக கைப்பற்றியது பொலிஸ்!
23 Apr,2019
சந்தேகத்துக்கிடமானவையெனக் கூறி அறிவித்த வாகனங்களில் இரண்டை பொலிஸார் வரக்காப்பொலையில் இன்றிரவு அதிரடியாக கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் ஜுனைதீன் என்பவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த வாகனம் ஒன்றில் இருந்து நான்கு வோக்கிடோக்கிகளும் மீட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
பி.எச் 3779 என்ற கேரவன் வானும் – 144-2646 என்ற இலக்கமுடைய ஹீரோ ஹோண்டா பைக் ஒன்றுமே மீட்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் சந்தேகத்துக்கிடமானவையென இன்று மாலை பொலிஸ் அறிவித்திருந்தது.பயங்கரவாத தடுப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.