தற்கொலைக் தாக்குதல் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 310 பாகிஸ்தான்6 பிரஜைகள் கைது
23 Apr,2019
நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் தொகை 310 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மேலும் 500 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கருகில் சந்தேகத்திற்கிடமான பொதி;பொலிஸார் சோதனை
கொழும்பை அண்டிய பகுதிகளில் பொலிஸாரால் சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொதி ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பொதியை பொலிஸார் சேதனையிட்டு வருவதால் கரையோர ரயில் சேவையில் தாமதமேற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
6 பாகிஸ்தான் பிரஜைகள் கைது
நீர்கொழும்பு பகுதியில் வைத்து 6 பாகிஸ்தானிய பிரஜைகளை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த 6 பாகிஸ்தானிய பிரஜைகளும் வீசா இன்றி தங்கியிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட 6 பாகிஸ்தானிய பிரஜைகளிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.