வதந்திகளை நம்ப வேண்டாம் ; தொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்!
21 Apr,2019
இன்றைய வெடிப்பு சம்பவங்கள் குறித்து சபாநாயகர் கருஜய சூரிய வெளியிட்டுள்ள தனது விஷேட செய்தியில் பல்வேறு விடயங்களை சுட்டிகாட்டியுள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தினால் மெற்கொள்ளக் கூடிய அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு இது தொடரப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டள்ளன.
மற்றும் இந்த தேவாலயங்களை குறிவைத்தும் , பொது மக்கள் அதிகம் நடமாடக் கூடிய முக்கிய இடங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வெடிப்பச் சம்பவம் தொடர்பில் அனைத்து மக்களும் சோகத்தில் உள்ளனர்.
இந்த சம்பவங்கள் குறித்து வெளியிடப்படுகின்ற பொய்யான வதந்திகளை நம்பாமல் அனைவரும் அமைதியாக செயற்பட வேண்டும்.
இந்த திட்டமிட்ட சதித்திட்டக்காரர்களையும் அவர்களின் நோக்கம் குறித்தும் அறிந்துக் கொள்வதற்காக அனைவரும் விசாரணைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.
நாட்டு மக்கள் அனைவரும் அமைதியாக செயற்படுவதுடன், நாட்டில் ஏற்பட்டள்ள சிக்கல் நிலைமை குறித்துஅவதானமாகவும் இருக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்!
நாட்டில் இன்று பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் பாதுகாப்பினை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டு மக்கள் பொறுமையுடனும், அமைதியுடனும் செயற்படுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வதந்திகளை கேட்டு பதற்றமடைய வேண்டாம் எனவும் ரணில் விக்ரமசிங்க அந்த டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.