இலங்கையில் உயிரியல் பூங்காவில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலியானார்.
20 Apr,2019
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் குமணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள சாலையை சீரமைக்கும் பணிகள் நேற்று நடந்தது. இதில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலர் மதிய உணவை முடித்துவிட்டு, அங்குள்ள ஒரு மரத்துக்கு அடியில் படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று, அவர்களை சரமாரியாக தாக்கியது. சிறுத்தை கடித்து குதறியதில் ஒருவர் பலியானார். மற்றொரு தொழிலாளி பலத்த காயம் அடைந்தார்