யூரோவுக்கு நிகராக வலுவடையும் சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி
19 Apr,2019
அமெரிக்க டொலர் மற்றும் யூரோவுக்கு நிகராக சிறிலங்கா ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதாக சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 4 வாரங்களாக அமெரிக்க டொலருக்கு நிகராக சிறிலங்கா ரூபாயின் பெறுமதி வலுவான நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது.
மத்திய வங்கியினால் ரூபாவின் பெறுமதியை தக்க வைப்பதற்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய சிறிலங்கா மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கு அமைய வெளிநாட்டு நாணயங்களில் பெறுமதியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 172 ரூபா 48 சதம் விற்பனை பெறுமதி 176 ரூபா 32 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223 ரூபா 84 சதம். விற்பனை பெறுமதி 231 ரூபா 21 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193 ரூபா 54 சதம் விற்பனை பெறுமதி 200 ரூபா 48 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 169 ரூபா 65 சதம். விற்பனை பெறுமதி 175 ரூபா 75 சதம்.
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 133 ரூபா 15 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 122 ரூபா 67 சதம். விற்பனை பெறுமதி 127 ரூபா 94 சதம்.
இதேவேளை, கொழும்பு பங்கு சந்தையிலும் வளர்ச்சி வீதம் ஒன்றையே அவதானிக்க முடிந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.