இலங்கையில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.
18 Apr,2019
இலங்கையில் 14-ந் தேதி சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதனால் அங்கு அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 30 பேர் இறந்தனர்.
இது குறித்து இலங்கை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “புத்தாண்டையொட்டி 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 1,270 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறியதாக 34 ஆயிரம் வழக்குகள் பதிவாகி உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்துகளில் 30 பேர் இறந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்” என்றார்.