இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட செயற்கைகோள்ஸ
16 Apr,2019
இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட ராவணா- 01 எனப் பெயரிடப்பட்டுள்ள செயற்கைகோள் நாளைய தினம் விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.
குறித்த செயற்கைகோள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சிங்கனஸ் என்ற ரொக்கட் ஊடாக இந்த செயற்கைகோள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான தரிது ஜயரத்ன என்ற மாணவன் மற்றும் தாய்லாந்து பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற துலானி சாமிகா என்ற மாணவியும் இணைந்து இந்த செயற்கை கோளை தயாரித்துள்ளனர்.
1000 சென்றி மீற்றர் வரை சிறியதாக காணப்படும் இந்த செயற்கைக்கோள் 1.1 கிலோகிராம் நிறையை கொண்டுள்ளது.
ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனத்தில் வைத்து இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.