டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் ஐவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
05 Apr,2019
டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் ஐவர் இன்று காலை 5.25க்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில், பாடகர் ரியன் ஹலரி வென்ரூசனும் அடங்குகின்றார் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.எல். 266 என்ற விமானத்தில் வந்து இறங்கியபோது குற்றப்புனலாய்வுப் பிரிவினர், அவர்களை கைதுசெய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.