முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன மன்னார் மனித புதைகுழி மனித எச்சங்கள்
04 Apr,2019
மன்னார் மனித புதைகுழியில் மேலதிகமாக அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் அனைத்தும் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திடீரென முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 23 திகதி மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதோடு, களனி பல்கலைக்கழக பேராசியர் ராஜ் சோம தேவவின் அறிக்கையானது மூன்று மாத காலப்பகுதியில் சமர்பிக்கும் படியாக கோரப்படுருந்தது.
இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை குறித்த மனித புதைகுழியானது முழுமையாக சீர்செய்யப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு மேலதிகமாக காணப்பட்ட அனைத்து மனித எலும்புக்கூடுகளும் புதை குழியில் இருந்து அப்பறப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் குறித்த மனித புதை குழியானது சிறிய அளவில் அகலப்படுத்தப்பட்டு மீண்டும் பொலித்தீன் மற்றும் பாதுகாப்பாக மூன்று மாத காலப்பகுதிக்கு மூடப்படவுள்ளது.
இந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் பேராசிரியர் ராஜ் சோம தேவவினால் மன்னார் மனித புதைகுழி தொடர்பாகவும் மண் படைகள் தொடர்பகவும் அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற சீரமைக்கும் பணியில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ, பேராசிரியர் ராஜ் சோம தேவ உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த பணியை மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா நேரடியாக சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது