புலிகளுடைய தலைவராக வந்திருப்பாராம் கதிர்காமர் – வடக்கு ஆளுநர்!!
28 Mar,2019
யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக வந்திருப்பேன் என்று முன்னாள் அயலுறவுத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல எனது நேர்காணலின்போது தெரிவித்தார்.
இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
நான் ரூபவாகினி தொலை க்காட்சி சேவையில் நேர்காணல்கள் பலவற்றைச் செய்துள்ளேன். முன்னாள் அயலுறவுத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல யாருக்கும் நேர்காணல் வழங்குவதில்லை. ஆனால் எனக்கு வழங்கினார்.
20 நிமிடங்கள் என்று ஒதுக்கி ஆரம்பித்த நேர்காணல் 49 நிமிடங்கள் வரையில் நீடித்தது. இதன்போது, தான் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து இருந்திருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து அதன் தலைவராக வந்திருப்பேன் என்று கூறினார், என ஆளுநர் குறிப்பி ட்டார்